இந்த சீசனில் ஷாட்-ரிக் வெற்றி பெற்று அசத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி

Pravin
டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த 12வது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 42வது லீக் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் முதன் முதலாக இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக தான் வெற்றி பதிவு செய்தது பெங்களுரு அணி. இந்த போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றால் தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம் என்பதால் இந்த போட்டியின் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் கோலி முகமத் சமி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய பார்த்திவ் படேல் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். பார்த்திவ் படேல் 43 ரன்னில் முருகன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய டி வில்லியர்ஸ் அரைசதம் விளாசி அசத்தினார். அதன் பின்னர் வந்த மொயின் அலி மற்றும் அக்ஷிதிப் நாத் இருவரும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

ஸ்டோனிஸ் மற்றும் டி வில்லியர்ஸ்
ஸ்டோனிஸ் மற்றும் டி வில்லியர்ஸ்

அதன் பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் டி வில்லியர்ஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய டி வில்லியர்ஸ் 82 ரன்களும் ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 202-4 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இருவரும் அதிரடியாக விளையாடினர். கிறிஸ் கெய்ல் 23 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த மயான்க் அகர்வால் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடினார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

அகர்வால் 21 பந்தில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுல் 42 ரன்னில் மொயின் அலி பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் நிகோலஸ் பூரண் இருவரும் நிலைத்து விளையாடினர்.

பூரண் அதிரடியாக விளையாட மில்லர் 24 ரன்னில் சைனி பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து பூரண் 46 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பெங்களுரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now