கிரிக்கெட் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன. இவ்வாறு விளையாடி வரும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு சின்னங்களைக் கொண்டிருக்கும். அந்த சின்னங்கள். அணி வீரர்களின் ஆடைகளில் பொரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு, பாகிஸ்தான் அணிக்கு நட்சத்திரம், வங்கதேச அணிக்கு புலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடற்கரை, இலங்கை அணிக்கு சிங்கம், தென்னாப்ரிக்க அணிக்கு தாமரையின் மேல் அவர்களின் கொடி மற்றும் இங்கிலாந்து அணிக்கு மூன்று சிங்கங்களின் மேல் கிரீடம் போன்ற சின்னங்கள் உள்ளன.
பெரும்பாலான சின்னங்கள் அந்தந்த நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் அவர்களின் தேசிய விலங்கு போன்றவற்றையே அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு தேசிய விலங்காக இருப்பதால் அது தற்போது அவர்களின் சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தேசிய விலங்கு ‘ ராயல் வங்கப் புலி ‘ . எனவே வங்கதேச அணியினர் புலியினை தங்களது சின்னத்தில் வைத்துள்ளனர். இலங்கை அணிக்கு தேசிய விலங்கு அதிகாரப்பூர்வமாக இன்றளவும் அறிவிக்கப்படாத நிலையில் சிங்கம், யானை போன்ற சில விலங்கள் உள்ள நிலையில் அவர்களின் தேசிய விலங்காக கருதப்படுவது சிங்கம். எனவே அதன் கையில் கத்தியுடன் அவர்கள் சின்னம் வைத்துள்ளனர்.
நியூசிலாந்து வீரர்கள் கிவி என அழைக்கப்பட காரணம்
நியூசிலாந்து இயற்கை வளம் நிறைந்த நாடு. எனவே அங்கு பலவிதமான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கிவி என்றழைக்கப்படும் வித்தியாசமான பறவை இனம் ஒன்று அங்கு மட்டுமே காணப்படுகிறது. இந்த பறவைகள் அளவில் மிகச் சிறியதாக காணப்படுகின்றன. இவற்றிற்கு இறக்கைகள் இருந்த போதிலும், இவற்றால் பறக்க முடிவதில்லை. எனவே இவை நடந்தே செல்கின்றன. இவற்றின் இறகுகள் மிக மெல்லியதாக காணப்படுகின்றன. முதலாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய படைவீரர்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு சூட்டிய பெயர் கிவி. காரணம் அவர்கள் கிவி பறவையைப் போல இருப்பதாக கூறினார்கள். நாள்போக்கில் அனைத்து நாட்டு மக்களும் நியூசிலாந்து மக்களை கிவியன்ஸ் என அழைத்தனர். இதனால் நியூசிலாந்து நாட்டில் கிவி பறவை தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது. இந்த காரணத்தினால் தான் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிவி என அழைக்கப்படுகின்றனர்.
இலை சின்னம் ஏன்?
நியூசிலாந்து நாட்டன் தேசிய மரமாக இருப்பது ‘ சில்வர் பெர்ன்’ என அழைக்கப்படும் ஒருவித மரங்கள். இவை இந்த நாட்டில் அதிகமாக காணப்படுகின்றன. இதன் இலைகளை தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் சின்னமாக பயன்படுத்துகின்றனர். இந்த இலைச் சின்னமானது இவர்கள் கிரிக்கெட்டில் மடுமல்லாது அனைத்து அரசு சின்னங்களிலும் உபயோகிக்கின்றனர். இவர்களின் சின்னமானது கருப்பு நிற பின். புறத்தில் சில்வர் நிற இலையைக் கொண்டிருக்கும். அவர்களின் கால்பந்து அணியில் மட்டும் சில்வர் நிற பின்புறத்தில் கருப்பு நிற இலை கொண்ட சின்னம் உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தேசியக்கொடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. எனவே நியூசிலாந்து நாட்டில் தேசியக்கொடியை மாற்றுவதற்காக முயற்சித்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு மக்களிடன் அதிக வாக்குகளை பெற்ற புதிய தேசியக்கொடியிலும் இந்த ‘ சில்வர் பெர்ன் ‘ இலை தான் முக்கிய பாகமாக உள்ளது.
இதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியினர் ‘ பிளாக் கேப்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் கருப்பு நிற தொப்பியுடன் கூடிய கருப்பு ஜெய்ஸியை பயன்படுத்துவதே.
இதேபோல் மற்ற நாடுகளின் கிரிக்கெட் சின்னங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கமெண்ட்-ல் தெரிவிக்கவும்.