கிரிக்கெட்டில் அன்று முதல் இன்று வரை பல மாற்றங்கள் வந்துள்ளன. டி 20 போட்டிகள் , பேட்களின் அளவுகள் , தொழில்நுட்ப மாற்றங்கள் , கிரிக்கெட் விதிகளில் பல மாற்றங்கள் அவ்வளவு ஏன் டி 10 போட்டிகள் கூட வர தொடங்கிவிட்டன . ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட சில அடிப்படை விஷயங்களை மாற்ற இயலவில்லை, அவற்றில் ஒன்று தான் கிரிக்கெட்டில் பயன்படுத்தபடும் பந்துகள். இதை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை காண்போம் .
சரி , டெஸ்ட் போட்டிகளில் ஏன் இன்னும் வெள்ளை உடை அணிந்து விளையாடுகின்றனர் ?. இதற்கான பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
சிவப்பு நிற பந்துகள் :
கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலங்களில் நீண்ட நாள் விளையாடக்கூடிய டெஸ்ட் வகை போட்டிகள் தான் விளையாடப்பட்டது . டெஸ்ட் போட்டிகள் என்பது ஒரு அணிக்கு தலா 20 விக்கெட்டுகள் வீதம் ஐந்து நாட்கள் விளையாடப்படுவதாகும் . எனவே அதில் பயன்படுத்தபடும் பந்துகள் வெகுவிரைவில் அதன் தன்மையை இழக்க வாய்ப்புள்ளது. இதற்க்கு தீர்வாகவே சிவப்பு நிறத்தில் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. நிறங்களில் சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை காட்டிலும் அதிகம் பிரதிபலிக்க கூடியது. இது அறிவியலின் படி நிரூபணமான ஒன்று, எனவே தான் சிவப்பு நிறம் கவர்ச்சியின் அடையாளமாக குறிக்கப்படுகிறது. இதன்பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்த ஆரமித்தனர். இதனால் மேலும் சில நன்மைகள் உள்ளன குறிப்பாக 140 கி .மீ . வேகத்தில் பந்து வரும்போது கூட இந்த சிவப்பு நிறத்தை பேட்ஸ்மேன்களால் நன்றாக பார்க்கமுடியும். அதுமட்டுமில்லாமல் ஆசிய துணைக்கண்டத்தில் கிரிக்கெட் ஆடும்பொழுது பந்தின் நிறமானது விரைவில் மாற தொடங்கும், குறிப்பாக வெள்ளை நிற பந்தை நாம் பயன்படுத்தினால் 80 ஓவர்கள் வரை பந்து வீசும்பொழுது பந்து தேய்ந்து கருப்பு நிறமாகவோ ( களிமண் ஆடுகளம் ), சிவப்பு நிறமாகவோ( செம்மண் ஆடுகளம் ), மாற வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொன்டே சிவப்பு நிற பந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளது .
வெள்ளை சீருடை :
அப்படி இருக்கையில் ஏன் கிரிக்கெட் வீரர்கள் வெள்ளைசீருடை அணிந்து விளையாடுகின்றனர் என்று கேட்பதும் புரிகிறது, அதில் சுவாரசியம் என்னவென்றால் வீரர்கள் பல வண்ணங்களில் உடை அணியும்போது சிவப்பு நிற பந்தை பார்க்கமுடியாமல் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. (எ.கா ) இப்பொழுது மேற்கு இந்திய அணியும்,ஜிம்பாப்வே அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது என வைத்துக்கொள்ளுங்கள் ., இரு அணிகளின் சீருடைகளும் சிவப்பு நிறம் தான் அப்போது எங்கு பார்த்தாலும் சிவப்பு நிறமாக தான் தெரியும், இந்த சூழலில் பௌலர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன் சிவப்பு நிற பந்தை சரியாக கணிக்க இயலாது. இதனாலேயே டெஸ்ட் போட்டிகளில் இன்னும் வெள்ளை சீருடை அணியப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அணியின் ஸ்பான்ஸர் விபரங்களை கூட பளிச்சென்று தெரியும்படி இருக்கக்கூடாது. அதனாலேயே தான் வீரர்களின் முன்புறம் ஸ்பொன்சாரின் பெயரோ, பின்புறம் அடையாள எண்களோ இல்லாமல் காணமுடியும்.
பிங்க் நிற பந்து :
கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துசெல்லும் ஒரு குறிக்கோளோடு அறிமுகப்படுத்தபட்டது தான் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள். தற்போது நவீன யுகத்தில் அனைவரும் இயந்திரம் போல ஓடி கொண்டிருப்பதால், ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் வருவது குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. அதற்க்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அனால் இதில் வழக்கம் போல பயன்படுத்த படும் சிவப்பு நிற பந்தை பயன்படுத்த முடியாது., ஏனேனில் இரவில் சிவப்பு நிறம் கண்களுக்கு தெரியாது. இதனால் பல ஆராய்ச்சிகளுக்கு பின்பு பிங்க் நிற பந்துகளை பயன்படுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இது நல்ல பயனையும் தந்தது.
வெள்ளை நிற பந்து :
ஒருநாள் போட்டிகள் விளையாட ஆரம்பமான பொழுது வெள்ளை நிற பந்து பயன்பாட்டிற்கு வந்தது. டெஸ்ட் போட்டிகளை போன்று இதில் ஐந்து நாட்கள் விளையாடாத காரணத்தால், பெரும்பாலும் 50 ஓவர்கள் மட்டும் வீசுவதால் வெள்ளை நிறுத்தினால் ஆன பந்தே பயன்படுத்துகிறது. இதன் காரணமாக சீருடைகளை வண்ணமயமாக மாறின, ஸ்பொன்சர் பெயர்களும் அதில் பெரிதாக இடம்பெற்றன. மேலும் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாகவும் விளையாடப்படுவதால் வெள்ளை நிற பந்து மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது.
மேற்கூறிய காரணத்திற்கேற்ப டெஸ்ட் போட்டிகளில் மாற்றங்கள் கொண்டு வருவது அரிது., வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.