2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா அணி வெல்ல சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
விராட் கோலி - இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர், பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்.
இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு அறிந்தவர் தான் விராட் கோலி.
இன்றைக்கு இருக்கும் கிரிக்கெட் சூழலில் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பறக்க விடும் திறமை விராட் கோலியிடம் உள்ளது. இந்திய மண்ணில் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து வெளிநாட்டு மண்ணிலும் பந்து வீச்சாளர்களின் பந்துகளைப் பறக்க விட்டு இருக்கிறார்.
இந்திய தலைநகர் டெல்லியில், உழைப்புக்கு பேர் போன பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் விராட் கோலி.
தன்னம்பிக்கை மற்றும் விட முயற்சியின் மூலம் அவர் உலகின் தலை சிறந்த வீரராகத் திகழ்கிறார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து வரும் இவர், விரைவில் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் நூறு சர்வதேச சதத்தினை முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.ஸ். லட்சுமண், மற்றும் வீரேந்தர் சேவாக் என யாரும் செய்திடாத ஹட்ட்ரிக் சதத்தினை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் அடித்துச் சாதனை புரிந்தார் விராட் கோலி.
இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்று கோப்பையைத் தட்டி சென்றது. அன்றைய நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மனவருத்தத்தை விட விராட் கோலி மிகவும் மன வருத்தம் அடைந்திருப்பார்.
2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியிலும் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்று, இறுதிப்போட்டியில் ஹைராபாத் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.
இப்போது விராட் கோலிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது தான் 2019 இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டி.
இந்த 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி விராட் கோலிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், 2019 உலக கோப்பையை வெல்வது மூலம் இந்தியாவிற்கு விராட் கோலி தலைமையில் கிடைக்க போகும் மிகப் பெரிய வெற்றி இது.
இம்முறை இந்திய அணி 2019 கிரிக்கெட் உலக கோப்பை வெல்ல சில முக்கிய காரணங்கள் கீழ குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை விராட் கோலி தலைமையில் இந்தியாவிற்கு கிடைக்க போகும் மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹிந்திரா சிங் தோனிக்கு, 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தான் கடைசி உலக கோப்பை போட்டி. எனவே, இந்திய கிரிக்கெட் அணி இம்முறை உலக கோப்பையை வென்று தோனிக்கு பரிசளிக்க வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் புவேனஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா அவர்களும் மிக சிறப்பாகப் பந்து வீசி வருகின்றனர்.
இம்முறை இந்திய அணி 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.