தற்போதைய உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்த இடத்தை கிரிக்கெட் பிடிக்கிறது.அந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது கிரிக்கெட். ஆரம்ப காலங்களில் ஒருசில நாடுகள் மட்டுமே விளையாடி வந்த இந்த போட்டியை தற்போது பல நாடுகளும் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக எந்த வீரரும் தங்களது ஜெர்சிக்கு பின் தங்களது எண்களை அச்சிடக்கூடாது என இருந்தது. ஆனால் தற்போது அதுவும் நீங்கி விட்டது. சமீபத்தில் துவங்கிய ஆஷஸ் தொடரிலும் வீரர்கள் தங்களது எங்களை தங்களது ஆடைகளில் பதிவிடத்துவங்கி விட்டனர். இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு 7 என சொன்னால் தோனி என அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். இந்த எங்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா. அதனை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#1) மகேந்திர சிங் தோனி - 7
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் எண் 7 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணை அவர் எதற்க்காக தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் தெரியுமா? தோனியின் பிறந்த நாள் 7 - 7 - 1981. இதில் பிறந்த நாள் மற்றும் மாதம் இரண்டும் ஏழாம் எண்ணாகவே இருப்பதால் அதனை தன் ஜெர்சி எண்ணாக இணைத்துக் கொண்டார் தோனி.
#2) விராட் கோலி - 18
இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதில், " நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006 அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பவே என்னுடன் இருப்பதாக தோன்றும்" எனவும் தெரிவித்தார்.
#3) ரோஹித் சர்மா - 45
ரோஹித் சர்மா தற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த வீரர், டி20 போட்டிகளில் அதிகமுறை சதமடித்த வீரர் என பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். இவரது ஜெர்சி எண் 45 இது இவரின் தாயாரால் தேர்வு செய்யப்பட்டது. அதாவது ரோஹித் சர்மா-வின் அதிஷ்ட எண் 9. ஆனால் அது இவருக்கு முன்னரே பார்த்தீவ் படேலுக்கு சொந்தமானது. அதனால் 4+5 = 9 வருவதால் 45-ஐ தனது எண்ணாக தேர்வு செய்துள்ளார் இவர்.
#4) ராகுல் டிராவிட் - 5, 19
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படும் டிராவிட் ஆரம்ப காலங்களில் 5 என்ற எண்ணையே தனது ஜெர்சி எண்ணாக கொண்டிருந்தார். ஆனால் அது இவருக்கு சிறப்பானது அமையவில்லை. எனவே தனது திருமணத்திற்கு பின் தனது மனைவியின் பிறந்தநாளான 19 என்ற எண்ணை தனது எண்ணாக நிர்ணயித்து கொண்டார். இது இவருக்கு அதிஷ்ட எண்ணாகவும் அமைந்தது.
#5) விரேந்தர் சேவாக் - 44, 46, -
இந்த பட்டியலில் நாம் பார்க்கும் வீரர்களிலேயே சற்று வித்தியாசமானவர் ஷேவாக். பெரும்பாலும் நாம் பார்த்த போட்டிகளில் இவர் தனது ஜெர்சி-க்கு பின் எந்த எண்ணையும் இணைக்காமல் தான் களத்தில் விளையாடுவார். இவரும் ஆரம்ப காலகட்டங்களில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் போது 44 என்ற என்னுடன் களமிறங்கி விளையாடி வந்தார். இது இவருக்கு சரிவர அமையாததால் அதன் பின்னர் ஜோதிடரின் அறிவுரையின் பேரில் 46 என தனது எண்ணை மாற்றி கொண்டார். இதுவும் இவருக்கு எந்த பலனுமளிக்கவில்லை. எனவே இனிமேல் தான் எந்த எண்ணையும் ஜெர்சி-ல் இணைக்கப்போவதில்லை என முடிவெடுத்து எண்ணே அச்சிடாத ஆடையுடன் விளையாடி வந்தார்.
#6) தினேஷ் கார்த்திக் - 99, 19, 21
தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டே அறிமுகமாகி விட்டார். அப்போது வரை இவர் முதல்தர போட்டிகளில் பயன்படுத்தி வந்த எண் 19. ஆனால் அப்போது அணியில் இருந்த ராகுல் டிராவிட் அந்த எண்ணை தனது ஜெர்சி-ல் அணிந்திருந்ததால் இவருக்கு அந்த எண் கிடைக்காமல் போனது. அதனால் தற்காலிகமாக 99 என்ற எண்ணை உபயோகித்து வந்தார் இவர். அதன் பின் டிராவிட் ஓய்வு பெற்ற பின் 19 என்ற எண்ணை தனது ஜெர்சி-ல் இணைத்துக்கொண்டார். பின் தனது திருமணத்திற்கு பின்னர் தனது காதல் மனைவி தீபிகா பல்லிகலின் பிறந்த நாளான 21 என்ற எண்ணை தனது சர்வதேச போட்டிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இருந்தாலும் தனது பழைய எண்ணான 19-ஐ ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தி வருகிறார் இவர்.