ஐபிஎல் தொடர் தொடங்கிய காலத்திலிருந்தே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைசிறந்த அணியாகத்தான் திகழ்ந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகரான ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ளனர். பொதுவாக மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் அதிக அதிரடி ஆட்டக்காரர்கள் இடம் பெறுவார்கள். எனவே தான் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடிக்கிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக வலுவான அணியாக கருதப்படுவதற்கான காரணங்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் மற்றும் இவின் லீவிஸ், ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார்கள். முதல் ஒரு சில போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த ஜோடி சிறப்பாக அமையவில்லை. எனவே ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். சூரியகுமார் யாதவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பைக் கொடுத்தார் ரோகித் சர்மா.
அவரும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, நிரந்தரமாக தொடக்க ஆட்டக்காரராக மாறினார் சூர்யகுமார் யாதவ். லீவிஸ் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட கூடியவர். சூர்யகுமார் யாதவ் விரைவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நின்று ரன்களை அடித்து கொடுப்பவர். எனவே இந்த ஜோடி, மும்பை இந்தியன்ஸ் அணியில் வலுவானதொடக்க ஜோடியாக அமைந்துள்ளது.
#2) அதிரடிக்கு பெயர் போன ஆல்ரவுண்டர்கள்
இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி, யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்துள்ளது. யுவராஜ் சிங்கின் அதிரடி, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதால் இந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர் பொல்லார்ட். இவர் பல போட்டிகளில் தனி ஒருவராக போராடி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா உள்ளனர். ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிப்பதில் பெயர் போனவர். குருணால் பாண்டியா பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த நான்கு ஆல்ரவுண்டர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர்.
#3) சிறந்த டெத் பவுலர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர்-1 டெத் பவுலராக விளங்கும், பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துதுள்ளது கூடுதல் பலமாக உள்ளது. இவர்கள் இருவரும் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ஆகும். எனவே தான் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் மிக வலுவான அணியாக இருக்கிறது.