இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுமே உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் தோல்விகளை கண்டு துவண்டு காலம் தாழ்த்தாமல் ஆகஸ்ட் 3 அன்று இரு அணிகளும் டி20 போட்டியில் பலபரிட்சை நடத்த உள்ளன. இத்தொடர் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான தொடராகும். ஏனெனில் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சி ஆட்டமாக இரு அணிகளுக்கும் இத்தொடர் அமையும்.
மிகவும் பரபரப்பாக நடைபெறும் இத்தொடரில் இரு அணிகளிலுமே மிகவும் வலிமையான டி20 வீரர்களை கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரில் சில சாதனைகள் முறிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இந்த டி20 தொடரில் சில இந்திய வீரர்களால் கடந்த கால சாதனைகள் சமன்செய்யப்பட வாய்ப்புள்ளது. நாம் இங்கு குறுகிய ஓவர்களை கொண்ட இந்த டி20 தொடரில் முறியடிக்க வாய்ப்புள்ள 3 சாதனைப் புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்.
#3 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக அரைசதங்கள்
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் அதிக மதிப்பு மிக்க வீரர் ரோகித் சர்மா பல கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். "ஹீட்மேன்" என்றழைக்கப்படும் இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 334 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும்.
இரு முறை உலக டி20 சேம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ரோகித் சர்மா 47 சராசரி விகிதத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் 145 அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். எதிர்வரும் டி20 தொடரில் ரோகித் சர்மா 2 அல்லது அதற்கு மேலான அரைசதங்களை விளாசுவார் எனில் ஒரு புதிய மைல்கல்லை அடையப்போகிறார். திலகராத்னே தில்சான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 9 டி20 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களை விளாசி இச்சாதனையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு டி20யில் தில்சானின் அதிகபட்ச ரன்கள் 96*.
ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் அற்புதமான பேட்டிங்கை வெளிபடுத்தி அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். எனவே இதே ஆட்டத்திறனை ரோகித் சர்மா தொடர்ந்து வெளிபடுத்தி தில்சானின் சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
#2 சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன். இவரது அதிரடி தொடக்க ஹீட்டிங் மூலம் பௌலர்களை தடுமாறச் செய்து தனி ஒருவராக இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா களத்தில் இருக்கும் போது எதிரணி பௌலர்களுக்கு மிக்க பயத்துடனே பௌலிங்கை மேற்கொள்வார்கள். இவரது பேட்டிங் ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு இருக்கும். எனவே மிகவும் கடினமான ஷாட் விளாசி பவுண்டரிகளை விளாசாமல் அதிரடியாகவும், எளிமையாகவும் சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை உயர்த்தும் திறமை உடையவர்.
சர்வதேச டி20யில் 100க்கும் மேலான சிக்ஸர்களை விளாசிய ஒரே இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. வலதுகை பேட்ஸ்மேனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கிறிஸ் கெய்லின் சாதனையை வீழ்த்த 3 சிக்ஸர்கள் மட்டுமே விளாச வேண்டும். ரோகித் சர்மாவிற்கு உள்ள திறமைக்கு இச்சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
#1 சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகள் விளாசிய பேட்ஸ்மேன்
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் மோதும் முதல் போட்டியிலேயே ஒரு சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகளை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைதான் அது. இந்த சாதனையை முதலில் படைத்தவர் முன்னாள் இலங்கை தொடக்க ஆட்டக்காரரான தில்கரத்னே தில்சான். அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவருமே சர்வதேச டி20யில் 223 பவுண்டரிகளை விளாசியுள்ளனர்.
இருப்பினும் திலசான் இந்தச் சாதனையை படைக்க 79 இன்னிங்ஸை எடுத்துக் கொண்டார். ஆனால் விராட் கோலி 62 இன்னிங்ஸிலேயே இம்மைல்கல்லை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஒரு பெரிய ஹீட்டராக தன்னை மாற்றி கொள்ளாமல் சரியான இடத்தில் பந்தை விளாசும் திறமை படைத்தவராக விராட் கோலி திகழ்கிறார். தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலி எத்தகைய மைதனமாக இருந்தாலும் பவுண்டரிகளை சாதரணமாக விளாசும் திறன் கொண்டவர்.
ஆப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் முகமது ஷெஷாத்-தும் இம்மைல்கல்லின் அருகில் 218 பவுண்டரிகளுடன் உள்ளார். ரோகித் சர்மா மற்றொரு போட்டியாளராக 207 பவுண்டரிகளுடன் உள்ளார். தற்போதைய ஆட்டத்திறனை வைத்து பார்க்கும் போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என யார் வேண்டுமானாலும் இந்த சாதனையை முறியடிக்கலாம். ஆனால் விராட் கோலிக்கே அதிக வாய்ப்புகள் இச்சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.