#1 சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகள் விளாசிய பேட்ஸ்மேன்
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் மோதும் முதல் போட்டியிலேயே ஒரு சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சர்வதேச டி20யில் அதிக பவுண்டரிகளை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைதான் அது. இந்த சாதனையை முதலில் படைத்தவர் முன்னாள் இலங்கை தொடக்க ஆட்டக்காரரான தில்கரத்னே தில்சான். அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவருமே சர்வதேச டி20யில் 223 பவுண்டரிகளை விளாசியுள்ளனர்.
இருப்பினும் திலசான் இந்தச் சாதனையை படைக்க 79 இன்னிங்ஸை எடுத்துக் கொண்டார். ஆனால் விராட் கோலி 62 இன்னிங்ஸிலேயே இம்மைல்கல்லை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஒரு பெரிய ஹீட்டராக தன்னை மாற்றி கொள்ளாமல் சரியான இடத்தில் பந்தை விளாசும் திறமை படைத்தவராக விராட் கோலி திகழ்கிறார். தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலி எத்தகைய மைதனமாக இருந்தாலும் பவுண்டரிகளை சாதரணமாக விளாசும் திறன் கொண்டவர்.
ஆப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் முகமது ஷெஷாத்-தும் இம்மைல்கல்லின் அருகில் 218 பவுண்டரிகளுடன் உள்ளார். ரோகித் சர்மா மற்றொரு போட்டியாளராக 207 பவுண்டரிகளுடன் உள்ளார். தற்போதைய ஆட்டத்திறனை வைத்து பார்க்கும் போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என யார் வேண்டுமானாலும் இந்த சாதனையை முறியடிக்கலாம். ஆனால் விராட் கோலிக்கே அதிக வாய்ப்புகள் இச்சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.