கிரிக்கெட்டில் ரெட் கார்ட் பற்றி தெரியுமா???

மெக்ராத் மற்றும் பில்லி  பௌடன்
மெக்ராத் மற்றும் பில்லி பௌடன்

நம் மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்ற விளையாட்டுகள் கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி. இந்த மூன்று போட்டிகளே உலக மக்களின் கவனத்தை ஈர்த்த போட்டிகள் ஆகும். இதில் களத்தில் இருக்கும் வீரர் ஒருவர் தவறான செயலில் ஈடுபட்டாலோ அல்லது சண்டையிட முற்ப்பட்டாலோ அவரை உடனே கள நடுவரே தண்டிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட முறையே கார்டு காட்டும் முறை. இந்த கார்டு காட்டும் முறையில் 3 விதமான கார்டுகள் உபயோகிக்கப்படுகின்றன. இதில் பச்சை கார்டு காட்டும் பட்சத்தில் அந்த வீரர் உடனே களத்தை விட்டு வெளியேற வேண்டும். அவருக்கு பதில் மாற்று வீரர் ஒருவர் அவர் இடத்தில் விளையாடுவார். மஞ்சள் நிற கார்டு காட்டப்பட்டால் அந்த வீரருக்கு எச்சரிக்கை விடுவதாக அர்த்தம். மீண்டும் அதே செயலில் அந்த வீரர் ஈடுபடும் பட்சத்தில் அவருக்கு சிகப்பு கார்டு காட்டி களத்தை விட்டு வேளியேறும் நிலை ஏற்படும். அதுவே பச்சை நிற கார்டு காட்டப்பட்டால் வீரர் சிறப்பாக அனைத்து விதிகளையும் கடைபிடித்து விளையாடுவதாக அர்த்தம். ஆனால் இத்தகைய கார்டு காட்டும் முறை கால் பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது கிரிக்கெட்-ல் பயன்படுத்தப் படுவதில்லை.

ஆனால் ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒருமுறை இந்த கார்டு முறை பயன்படுத்தப்பட்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானாக கருதப்படும் மெக்ராத் -க்கு சிகப்பு கார்டு காட்டப்பட்டு அவர் களத்தை விட்டு வெளியேறினார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பில்லி பௌடன் சிகப்பு அட்டையை காட்டுகிறார்
பில்லி பௌடன் சிகப்பு அட்டையை காட்டுகிறார்

2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நியூசிலாந்து அணி ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது. அதுவே சர்வதேச போட்டிகளில் அவ்விரு அணிகளுக்கும் முதல் டி20 போட்டி ஆகும். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் ரிக்கி பாண்டிங் 55 பந்துகளில் 98* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மெக்கல்லம் 36 ரன்களும், ஸ்டைரிஸ் 66 ரன்களும் அதிகபட்சமாக குவித்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரெட் கார்டு காட்டிய பில்லி பௌடன்:

இறுதியில் அந்த அணி கடைசி பந்தில் வெற்றி பெற 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது உறுதியானது. இதனை உணர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் தான் சுழல் பந்து வீசுவதாக கூறி அந்த பந்தை பேட்ஸ்மேன் மில்ஸ்-யை நோக்கி உருட்டி விடுவது போல் சைகை செய்தார். இதனைக் கண்ட நடுவர் பில்லி பௌடன் மெக்ராத்-க்கு ரெட் கார்டு காட்டினார். ஆனால் இது விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி கார்டு காட்டும் முறை கிரிக்கெட்-ல் இல்லை. பின்னர் கடைசி பந்தை வீசிய மெக்ராத் மில்ஸ் விக்கெட்டினை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்டு காட்டும் முறை கிரிக்கெட்-ல் அறிமுகப்படுத்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த போதிலும் பெரும்பாலான நாடுகள் இந்த முறையை எதிர்ப்பதால் இன்றளவும் கார்டு முறை கிரிக்கெட் போட்டிகளில் கொண்டுவரப்படவில்லை.

இந்த கார்டு முறை குறித்த உங்களது கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்.

App download animated image Get the free App now