ஐ.பி.எல் 2019 ஏலம் : ஒவ்வொரு ஐ.பி.எல் அணியிலிருந்தும் தக்கவைக்கப்பட்ட & வெளியேற்றப்பட்ட முழு வீரர்களின் விவரங்கள்

IPl Auction
IPl Auction

அனைத்து ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகத்திற்கும் நேற்றைய நாள் ஒரு பெரும் வேலை நாளக இருந்திருக்கும்.தக்கவைக்கப்படும் வீரர்களின் விவரங்களையும் ,வெளியேற்றப்படும் வீரர்களின் விவரங்களையும் நேற்று ஐ.பி.எல் நிர்வாகம் சமர்பிக்க சொல்லியிருந்தது.அதன்படி 50க்கு மேற்பட்ட வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் ஏலம் நடைபெற உள்ளது.

யாரும் எதிர்பார்த்திராத சில நட்சத்திர வீரர்களையும் ஐ.பி.எல் அணிகள் ரிலீஸ் செய்துள்ளது.

கடந்த வாரங்களில் சில வீரர் பரிமாற்றங்கள் நடைபெற்றது.டிகாக் பெங்களூரு அணியிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டு மும்பை அணியினரால் வாங்கப்பட்டார். ஹைதராபாத் அணியிலிருந்த ஷிகர்தவான் டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு அந்த அணியிலிருந்து 3 இந்திய வீரர்களை ஹைதராபாத் பரிமாற்றம் செய்து கொண்டது.மார்கஸ் ஸ்டோனிக்ஸ் பஞ்சாப் அணியிலிருந்து பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டு பெங்களூரு அணியிலிருந்த மந்திப் சிங்கை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

ஒவ்வொரு அணியினரும் அந்த அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் விவரங்களையும், வெளியேற்றப்படும் வீரர்களின் விவரங்களையும் அறிவித்துள்ளது.அந்த வீரர்களின் முழு விவரத்தையும் நாம் இங்கு காண்போம்.

#1.மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி டிகாக்கை பெங்களூரு அணியிலிருந்து கடந்த வாரத்தில் வாங்கியுள்ளது.இதன் மூலம் தங்களது பேட்டிங் வரிசையை மேலும் வலு படுத்தியுள்ளது.

மும்பை அணி மொத்தமாக கடந்த சீசனில் விளையாடிய 10 வீரர்களை வெளியேற்றியுள்ளது.டுமினி ,பேட் கமின்ஸ்,முஷ்டபிசுர் ரகுமான்,அகிலா தனஞ்செயா போன்ற வெளிநாட்டு வீரர்களும் வெளியேற்றப்பட்ட 10 வீரர்களுல் அடங்குவர்.

மும்பை அணியின் நட்சத்திர நாயகன் ரோஹித் சர்மா வழக்கம் போல கேப்டனாக தொடருவார்.

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்:

சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், மொஹ்சின் கான், எம்.டி. நிதிஷ், ஷரத் லம்பா, தஜேந்தர் சிங் தில்லான், ஜேபி டுமினி, பாட் கம்மின்ஸ், முஷ்டபிசுர் ரகுமான், அகிலா தனஞ்செயா.

தக்கவைக்கபட்ட வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பூம்ரா, குறுநால் பாண்டியா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், மயான்க் மார்கண்டே, ராகுல் சகார், அனுகுல் ராய், சித்தேஸ் லாட், ஆதித்யா தாரே, பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லகன், ஆடம் மில்னே , ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

பரிமாற்றம் : பெங்களூரு அணியிலிருந்து டிகாக்

காலியிடங்கள் : 7 -- > 6 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர்கள்.

#2.டெல்லி டேர்டெவில்ஸ்

கடந்த சீசனின் ஏலத்தில் கௌதம் காம்பீர் முக்கிய வீரராக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.முதுபெரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான காம்பீர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.கடந்த ஐ.பி.எல் சீசனின் பாதியில் தொடர் தோல்விகளினால் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

மேக்ஸ் வெல், முகமது சமி போன்ற வீரர்களும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கபட்ட வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த், மன்ஜோட் கல்ரா, கொலின் முன்ரோ, கிறிஸ் மோரிஸ், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாட்டியா, ஹர்ஷால் படேல், அமித் மிஸ்ரா, ககிஷோ ரபாடா, ட்ரென்ட் போல்ட், சந்தீப் லாமிச்சே, ஏவிஸ் கான்

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: கௌதம் கம்பீர், ஜேசன் ராய், குர்கீரேட் மான், க்ளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, டான் கிரிஸ்டியன், சயான் கோஷ், லியாம் பிளன்கெட், ஜூனியர் தலா, நாமன் ஓஜா.

பரிமாற்றம் : அபிஷேக் சர்மா, விஜய் சங்கர்,நதிம் ஆகியோரை ஹைதராபாத் அணிக்கு கொடுத்து அவர்களிடமிருந்து தவானை வாங்கியுள்ளது.

காலியிடங்கள் : 10--> 7 இந்திய வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்கள்

#3.சென்னை சூப்பர் கிங்ஸ்

Csk
Csk

நடப்பு சேம்பியனான சென்னை அணி அவ்வளவாக வீரர்களை வெளியேற்றவில்லை.கடந்த சீசனில் விளையாடிய 3 வீரர்களை மட்டுமே வெளியேற்றியுள்ளது.

இங்கிலாந்து வீரர் மார்க் வுட், இந்திய உள்ளுர் வீரர்கள் கஷிட் சர்மா,கனிஷக் ஷேக் ஆகியோர் சென்னை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கபட்ட வீரர்கள்:

தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, கரன் சர்மா, ஷேன் வாட்சன், சர்துல் தாக்கூர், ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டுபிளஸ்ஸி, சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சகார், லுங்கி நிகிடி, ஆசிப் கே.எம், என் ஜெகதீசன், மோனு சிங், துருவ் ஷோரிய, சைதன்யா பிஷ்நொய், டேவிட் வில்லி, மிட்செல் சன்ட்னர்.

வெளியேற்றப்பட்ட வீரர்கள்:மார்க் வுட், கஷிட் சர்மா, கனிஷ்க் சேத்

காலியிடங்கள்:2 ---> 2 இந்திய வீரர்கள் , 0 வெளிநாட்டு வீரர்கள்

#4.சன்ரைசர்ஸ் ஹதராபாத்

Warner & bhuvi
Warner & bhuvi

2016ஆம் ஆண்டின் ஐ.பி.எல் சேம்பியனான ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தக்கவைக்கபட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் கடந்த சீசனில் விளையாட முழுவதும் தடைசெய்யப்பட்டிருந்தார்.

அணியின் பக்கபலமாக இருந்து ஷிகர் தவான் டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபிஷேக் சர்மா, விஜய் சங்கர்,நதிம் ஆகியோரை வாங்கியுள்ளது.

கரோலஸ் பிராத்வெயிட், அலெக்ஸ் ஹால்ஸ்,விருத்திமான் சாகா ஆகியோர் ஹதராபாத் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கபட்ட வீரர்கள்:பசில் தம்பி, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, நடராஜன், ரிக்கி பாய், சந்தீப் ஷர்மா, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், சையத் கலீல் அகமது, யூசுப் பதான், பில்லி ஸ்டேன்லெக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், முகமது நபி, ரஷீத் கான், மற்றும் ஷாகிப் அல்-ஹசன்.

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: சச்சின் பேபி, டான்மாய் அகர்வால், விருத்தி மான் சாஹா, கிறிஸ் ஜோர்டான், கார்லோஸ் ப்ராத்வாட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் சர்மா, சையத் மெஹ்தி ஹாசன்.

பரிமாற்றம் :ஷிகர் தவான் டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபிஷேக் சர்மா, விஜய் சங்கர்,நதிம் ஆகியோரை வாங்கியுள்ளது.

காலியிடங்கள் : 5--> 3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள்

#5.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

RCB
RCB

டிகாக்கை மும்பை அணிக்கு மாற்றியதுடன் மெக்கல்லத்தையும் அணியிலிருந்து வெளியேற்றியது பெங்களூரு அணி.இந்த வெளியேற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான்.கடந்த சீசனில் மெக்கல்லம் சரியாக விளையாடவில்லை.

அதுமட்டுமல்லாமல் மெக்கல்லத்துடன், கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட சஃப்ரஸ் கானையும் வெளியேற்றியது பெங்களூரு அணி.

தக்கவைக்கபட்ட வீரர்கள்: விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல், கொலின் டி கிரானட்ஹாம், பார்திவ் படேல், பவன் நேகி, குல்வான்ட கெஜ்ரோலியா, மொயின் அலி, நாதன் கோல்ட்டர் நைல், டிம் சவுத்தி, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி.

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: குவிண்டோன் டி காக், மன்தீப் சிங், பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆண்டர்சன், சஃப்ரஸ் கான், பவன் தேஷ்பாண்டே, மனன் வோரா, முருகன் அஷ்வின், அனிருதா ஜோஷி, அணிகிட் சவுத்ரி

பரிமாற்றம் : மந்திப் சிங் பஞ்சாப் அணிக்கு மாற்றப்பட்டு ஸ்டோய்னிஸே அவர்களிடமிருந்து வாங்கியுள்ளது நிர்வாகம், டிகாக்கை மும்பை அணிக்கு ரிலீஸ் செய்துள்ளது.

காலியிடங்கள் : 10--> 8 இந்திய வீரர்கள் ; 2 வெளிநாட்டு வீரர்கள்

#6.ராஜஸ்தான் ராயல்ஸ்

RR
RR

டார்சி ஷார்ட் , ஹன்ரீச் கிலஸ்ஸன்,ஜெய்தேவ் உனட்கட் போன்ற பெரிய வீரர்களை ராஜஸ்தான் அணி வெளியேற்றியுள்ளது.

கடந்த சீசனில் நன்றாக விளையாடிய வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது.கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தை ராஜஸ்தான் அணி வகித்து என்பது குறிப்பிடத்தக்கது.

தக்கவைக்கபட்ட வீரர்கள்: ரஹானே, கிருஷ்ணப்ப கவுதம், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதிஸன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபால்லின் லம்பார் ஜோஸ், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்சோதி

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: டார்சி ஷார்ட், ஹின்றிச் கிளஸ்ஸன்,பென் லாப்லின், டேனே பீட்டர்சன், ஜாஹிர் கான், துஸ்மந்த் சமிரா, ஜெயதேவ் உனட்கட், அனுரித் சிங், அன்கிட்‌ சர்மா, மற்றும் ஜடின் சக்சேனா.

காலியிடங்கள் : 9--> 6 இந்திய வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்கள்

#7.கிங்ஸ் XII பஞ்சாப்

Kxip
Kxip

சில பெரிய வீரர்களை பஞ்சாப் அணி வெளியேற்றியுள்ளது.கடந்த சீசனில் யுவராஜ் சிங் நன்றாக விளையாடத காரணத்தால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.ஆரோன் பின்ச், அக்சர் படேல் ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இறுதியில் சொதப்பிய காரணத்தால் பஞ்சாப் அணி கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் 7வது இடத்தை வகித்தது.

தக்கவைக்கபட்ட வீரர்கள்:லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மாயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், கருன் நாயர், டேவிட் மில்லர், மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: ஆரோன் பின்ச், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, யுவராஜ் சிங், பரிந்தர் ஸ்ரண், பென் ட்வர்ஸிஸ் , மனோஜ் திவாரி, அக்ஸிப் நாத், பிரதீப் சாகு, மயான்க் தகார் மற்றும் மன்ஜீர் தார்.

பரிமாற்றம்: ஸ்டோய்னிஸே பெங்களூரு அணிக்கு மாற்றம் செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மந்தீப் சிங்கை வாங்கியுள்ளது.

காலியிடங்கள்: 15--> 11 இந்திய வீரர்கள் ; 4 வெளிநாட்டு வீரர்கள்

#8.கல்கத்தா நைட் ரெய்டர்ஸ்

KKR
KKR

கிறிஸ் லின், சுனில் நரைன்,ரசல் ஆகிய வெளிநாட்டு நட்சத்திர வீரர்களை கல்கத்தா அணி தக்கவைத்துள்ளது.கல்கத்தா அணி கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் 3வது வந்து இடத்தை வகித்தது. இரண்டாவது அரையிறுதி வாய்ப்பில் ஹதராபாத் அணியிடம் தோற்றதால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது கல்கத்தா அணி.

தக்கவைக்கபட்ட வீரர்கள்:தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சுப்மன் கில், பிரதித் கிருஷ்ணா, சிவம் மாவி, நிதிஷ் ராணா, கமலேஷ் நாகர்கோட்டி, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா.

வெளியேற்றப்பட்ட வீரர்கள்:மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டாம் குர்ரான், கேமரூன் டெல்போர்ட், ஜொனாதன் செர்ல்ஸ், இஷாங்க் ஜாக்ஜி, அபூர் வான்கடே, வினய் குமார்.

காலியிடங்கள்: 12--> 7 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications