ஓய்வு முடிவை வாப்பஸ் பெற்ற சி.எஸ்.கே வீரர் அம்பத்தி ராயுடு !

Ambati Rayudu has altered his retirement plans

கதை என்ன?

இந்திய பேட்ஸ்மன் அம்பத்தி ராயுடு 2019 உலகக்கோப்பை தொடரின் போது அனைத்து வகையான ஃபார்மட்களுக்கும் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இவர் ஜூலை 3ம் தேதி இம்முடிவை வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது இவர் தனது ஓய்வு முடிவை ரத்து செய்வதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது 2020 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வெள்ளை பந்து தொடரிலும் பங்கேற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

உங்களுக்குத் தெரியாவிட்டால்…..

அம்பத்தி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 2018ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே அணியில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை இரண்டு முறை சென்னை அணியில் வாளையாடியுள்ளார். அம்பத்தி ராயுடு 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி கேம் சேன்ஞராக திகழ்ந்தார். இதனால் இவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், அம்பத்தி ராயுடு சர்வதேச தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தேர்வு பெறவில்லை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்கப்பட்டார். விஜய் சங்கரை இந்திய கிரிக்கெட் வாரியம் மூவகை (3D) வீரராக உள்ளதால் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர். இதை அம்பத்தி ராயுடு உலகக்கோப்பை தொடரை 3டி கண்ணாடியில் பார்க்க போவதாக மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் காயம் காரணமாக அடுத்தடுத்து வெளியேறிய போதிலும் இந்திய தேர்வுக்குழு அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாமல் ரிஷப் பந்த் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோரை தேர்வு செய்தனர். இதுவே அம்பத்தி ராயுடு தனது ஓய்வை முடிவை வெளியிட்டதற்கு முக்கிய காரணம் என்று பலர் கருத்து தெறிவித்தனர்.

முக்கிய கதை !

இந்திய பேட்ஸ்மன் அம்பத்தி ராயுடு "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" கிரிக்கெட் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில்

"நான் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் விளையாடுவேன், மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் வருவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் தங்களை வரவேற்கும். டி.என்.சி.ஏ லீக் தொடர் எனது வடிவத்தை மீண்டும் பெற எனக்கு ஒரு நல்ல தளமாக செயல்படும்" என்று கூறியுள்ளார்.

Ambathi Rayudu
Ambathi Rayudu

அம்பத்தி ராயுடு இந்திய அணியால் கைவிடப்பட்ட பின்னர் தனது உணர்ச்சி நிலை குறித்தும் பேசினார். மேலும் அவர் உலகக் கோப்பைக்காக மிக கடினமாக உழைத்ததாகவும் கூறிருந்தார். அவரின் உலகக்கோப்பை ஆசை நடைபெறவில்லை என்பதால் அவர் தற்போது ஐ.பி.எல் மற்றும் வெள்ளை பந்து போட்டிகளில் பங்கேற்று தனது திறைமையை மீண்டும் வெளிக்கொண்டு முடிவெடுத்துள்ளார்.

அடுத்து என்ன ?

அம்பத்தி ராயுடும்வின் ரசிகர்கள் மீண்டும் சி.எஸ்.கே அணியில் காண மிக ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்திய அணியில் மீண்டும் ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகத்தில் உள்ளது.

Quick Links

App download animated image Get the free App now