ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சிறந்த பேட்ஸ்மன் மற்றும் கேப்டன் ஆவார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை ( 2003 மற்றும் 2007 ) உலகக் கோப்பை தொடரில் வெற்றி தேடி தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் சிறப்பான ஆட்டத்தால் பல முறை ஒரு நாள் மற்றும் டெஸ்டில் தொடர்களில் ஆஸ்திரேயா அணி வெற்றி பெற்றுள்ளது.
இவர் ஒரு சிறந்த வலது கை பேட்ஸ்மன் மற்றும் சிறந்த ஸ்லிப் ஃபீல்டர் இவரை தாண்டி எந்தொரு பந்தும் போகாது. இவர் சிறந்த பந்துவீச்சாளாரும் கூட. எனவே இவர் ஆல் ரவுண்டர் ஆவார். 2003 மற்றும் 2007 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது மற்றும் ஸ்டீவ் வாவின் கீழ் 1999 உலக கோப்பை வென்ற போது அணியின் உறுப்பினராகவும் இருந்தார். 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாண்டிங் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படுகிறார், இவர் 324 போட்டிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக 220 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
ரிக்கி பாண்டிங் அறிமுகம் :
1992ம் ஆண்டு டாஸ்மானியா அணிக்காக முதல் தர கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 17தான். அவர் 1995ம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். 1995ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிக்கி அறிமுகமானார். இவர் முதன் முதலாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அறிமுகமானார்.
உலகக் கோப்பையில் ரிக்கி பாண்டிங் சாதனை :
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் என்று அழைகப்படும் ரிக்தி பாண்டிங் உலகக் கோப்பை தொடரில் மிகுந்த சாதனைகளை படைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான ரிக்கி, தனது முதல் ஆட்டத்திலே சிறப்பாக விளையாடினார்.
46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். இதில் பாண்டிங்கின் சராசரி 45.86 ரன்களாகும். பாண்டிங் 5 சதங்கள், 6 அரைசதங்களை 42 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 140 ரன்கள் அடித்ததே பாண்டிங்கின் அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக பாண்டிங்
- 145 பவுண்டரிகளையும்,
- 31 சிக்ஸர்களையும் நொறுக்கியுள்ளார்.
12,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 10000 ஓடி ரன்கள் எடுத்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் ஆவார். பல நூற்றாண்டுகளில் டெஸ்டிலும், ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஓடிஐ தொடரில் கேப்டனாக அதிகமான போட்டிகளில் பாண்டிங் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மிக அதிக ரன்கள் எடுத்த வீரர் பாண்டிங். ஆனால் இவருக்கு முன் டெண்டுல்கர் அதிக ரன்கள் எடுத்துளாளர். டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது அதிக ரன் வீரர் ரிக்கி பாண்டிங் தான். அதிக சதம் எடுத்த வீரர் என்று பார்க்கும் போது இவர் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இதிலும் சச்சின் முதல் இடம் விராட் கோலி இர்ணடாம் பெற்றுள்ளனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங் நவம்பர் மாதம் 2012 ல் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்றார். இதன்பின் 2013 பிப்ரவரியில் அவர் ஐபிஎல் பிரீமியர் லீக்கில் மும்பை இந்திய அணிக்கு தலைவராகவும் பயிற்சியாளராகவும் இருக்கின்றார்.