இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய வீரர்கள் களத்தில் விளையாட வரும்போது அவர்களை ஸ்டெம்பி-ற்கு பின் நின்று வர்ணித்துக் கொண்டிருந்தார். இது அனைத்து ஆட்டங்களிலும் தொடர்ந்தது. அவர் ரோகித் சர்மா களத்தில் உள்ள போது அவரிடம், "ரோகித் ஒருவேளை சிக்சர் அடித்தால் தான் மும்பை-யை இங்கு மாற்றுவதாக" கூறினார். ரோகித் சர்மா அந்த போட்டியில் சிக்சர் எதுவும் அடிக்கவில்லை. இந்நிலையில் டிம் பெயன் கூறிய அந்த நடவடிக்கை சமூக வளைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயன் அந்த ஆட்டத்தில் சதமடித்தால் அவரை ஐபிஎல் தொடரில் தங்கள் அணிக்கு வாங்குவதாக தெரிவித்தது. இந்நிலையில் டிம் பெய்ன் அந்த ஆட்டத்தில் வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனை சுட்டிக்காட்டி மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டரில் டிம் பெயின் மும்பை அணி அறிவித்த பந்தயத்தில் தோற்றுவிட்டதாக பதிவிட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் களத்தில் உள்ள போது அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் தோணி ஒருநாள் போட்டிகளில் திரும்ப வந்து விட்டதால் உனக்கு அணியில் இடம் கிடைக்காது எனவும், நீ வேண்டுமானால் ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்க்கலாம் எனவும் கூறினார். அது மட்டுமல்லாமல் நானும் என் மனைவியும் படத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் நீ வேண்டுமானால் என் குழந்தைகளை பார்த்துக்கொள் எனவும் கூறினார். இதனைக் கேட்ட ரிஷப் பண்ட் களத்தில் எதும் பேசவில்லை. பின்னர் டிம் பெயின் பேட்டிங் செய்ய வந்த போது அவரை நோக்கி ரிஷப் பண்ட் “ ஏ மயங்க் உனக்கு தற்காலிக கேப்டன் பற்றி தெரியுமா ? அவருக்கு வாய்ப் பேச்சு மட்டும் தான் “ எனக் கூறினார். மேலும் அவருக்கு பேசுவது மட்டுமே பிடிக்கும் எனவும் கூறி அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பண்ட்.
இது சமூக வளைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்திய வீரர் ரிஷப் பண்ட்-க்கு 15% அபராதம் விதித்தது ஐசிசி. இது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் இதுகுறித்து டிம் பெயினிடம் “ நீ பேசுவதை குறைத்துக் கொண்டு விளையாட்டில் அதிக கவனம் செலுத்து “ எனக் கூறினார்.
Check out @bhogleharssha’s Tweet:
இந்நிலையில் புத்தாண்டு உலகமெங்கும் கொண்டாடி வரும் வேளையில் டிம் பெயின் மனைவி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் பண்ட் மற்றும் தனது குழந்தைகளுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது சமூக வளைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரிஷப் பண்ட் ஒரு குழந்தையையும் பெயின் மற்றொரு குழந்தையையும் தூக்கியவாறு புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் ரிஷப் பண்ட், டிம் பெயின்-க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.