எம்.எஸ்.தோனியை விட ரிஷப் பன்ட் அதிக சதங்களை குவிப்பார் - ரிக்கி பாண்டிங்

Rishabh Pant & Ricky Ponting

நடந்தது என்ன ?

பழம்பெரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் பற்றி மிக அருமையான கருத்துக்களை கூறி புகழ்ந்து தள்ளியுள்ளார். 21வயதான இளம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சிட்னி டெஸ்டில் 159 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி-க்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார் இளம் இந்திய நாயகன்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ரிஷப் பன்ட் பற்றி கூறியதாவது : "ரிஷப் பன்ட் அற்புதமான திறமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட , ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். இவருக்கு ஒரு நல்ல கிரிக்கெட் விளையாட்டு திறன் உள்ளது. ரிஷப் பன்ட் சுழற்பந்து வீச்சாளர்களை கையாள்வதில் கைதேர்ந்தவராக உள்ளார். நான் இவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணியில் பயிற்சியாளராக செயல்பட்டதை நினைத்து பெருமை கொள்கிறேன். ரிஷப் பன்ட் ஒரு பயங்கர டி20 வீரர் மற்றும் அற்புதமான ஸ்ட்ரைக்கர்" என்றும்.

"ரிஷப் ஃபன்ட் ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் இரு 90 ரன்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டி , டி20 போட்டி என மூன்று வித கிரிக்கெட்டிலும் அதிக போட்டிகளில் பங்குபெற இவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பிங்கில் சற்று கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர் அதைக் கண்டிப்பாக செய்து மிகப்பெரிய விக்கெட் கீப்பராக வருவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அத்துடன் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. நாம் எப்போதும் தோனியை பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். தோனி நிறைய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் வெறும் 6 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இளம் வீரர் ரிஷப் பன்ட் வருங்காலத்தில் பல சதங்களை குவிக்க போகிறார்" என ரிக்கி பாண்டிங் இன்று நடந்த பிரஸ் மீட்-டில் கூறியுள்ளார்.

பின்னணி :

தோனி 2005 முதல் 2014 வரை இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியுள்ளார். இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 38.09 சராசரியுடன் 4876 ரன்களை அடித்துள்ளார். தோனி 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். வலதுகை பேட்ஸ்மேன் தோனியின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் 2013ல் சென்னையில் 224 ரன்கள் குவித்ததே ஆகும்.

கதைக் கரு

ரிஷப் பன்ட் 2018ல் ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் அறிமுகமானார். இவர் இதுவரை (சிட்னி டெஸ்ட் சேர்ந்து ) 9 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 49.71 என்ற விரைவான சராசரியுடன் 696 ரன்களை குவித்துள்ளார். ஓவல் மைதானத்தில் ரிஷப் பன்ட் தனது முதல் சதத்தை அடித்தார். இங்கிலாந்து மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பன்ட். இவர் இந்திய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளிலிலும் 92 மற்றும் 92 ரன்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சீரான பேட்டிங் திறனை ரிஷப் பன்ட் வெளிபடுத்தியுள்ளார். சிட்னியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 189 பந்துகளில் 159 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரிஷப் பன்ட் களமிறங்கும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களில் இருந்தது. புஜாரா ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்துக் கொண்டிருந்தார். பின்னர் 193 ரன்களில் லயன் சுழலில் வீழ்ந்தார் புஜாரா. அதன்பின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் பன்ட் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடிக்கும் பொறுப்பை புஜாராவிற்கு பிறகு ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடினார்.

ரிஷப் பன்ட்-ன் அதிரடி ஸ்டோரோக் பிளே மற்றும் பவுண்டரி & சிக்ஸர் அடிக்கும் முறை பழம்பெரும் கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் மட்டும் விக்கெட் கீப்பிங்கில் சற்று மேம்படுத்தினால் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தது என்ன ?

ரிஷப் பன்ட் சுழற்காற்றை போல் சுழன்று அதிவேக 159 ரன்களை அடித்ததால் இந்திய அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்து 622 ரன்களை அடைந்தது. இன்றைய ஆட்டநாளில் கடைசி 10 ஓவர்களை ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய போது கவாஜாவின் கேட்சை ரிஷப் பன்ட் தவறவிட்டார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமான அழுத்தத்தை கொடுப்பார்கள். இந்திய அணி விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் அதற்கு சரியான முறையில் கண்டிப்பாக ஒத்துழைப்பை அளிப்பார்.

எழுத்து : ராம் குமார்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links