போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 68 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 71 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு ஒரு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார்.
டிசம்பர் 2017 முதல் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டு வந்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவர் இலங்கைக்கு எதிரான தனது முதல் சர்வதேச தொடரில் 9, 88 மற்றும் 65 ரன்களை குவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே ரோகித் சர்மாவுடன் இரட்டைச்சத பார்டனர்ஷீப் செய்தார்.
சிறப்பான இந்த அறிமுக தொடருக்கு பின்னர் எதிர்பார்த்தபடி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். அதன்பின் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய தேர்வுக் குழுவும் வழக்கப்போல் சரியான நம்பர் 4 பேட்ஸ்மேனை அணியிலிருந்து நீக்கிவிட்டு மற்றொரு பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில் களமிறங்கிவிட்டது.
இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் ஒரு நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிகொணர்ந்தார். ஆனால் இந்திய தேர்வுக் குழுவோ அதிரடி பேட்ஸ்மேன்களின் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
2019 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷீப் மற்றும் பேட்டிங் மூலம் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டார். இந்த அணி சமீபத்தில் கரேபியனில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது இரு அரைசதங்களை விளாசினார்.
இந்திய ஏ அணியில் இவரது ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு ஸ்ரேயஸ் ஐயரை இந்திய அணியில் சேர்க்க தக்க சமயமாக இந்திய தேர்வுக்குழு எண்ணியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போது அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான இன்னிங்ஸை இந்திய அணிக்கு அளித்து தன்னை நிருபித்தார்.
இனிவரும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் 4 பேட்டிங் வரிசையிலும், ரிஷப் பண்டை நம்பர் 5 பேட்டிங் வரிசையிலும் களமிறக்கலாம். இந்த மாற்றத்தின் மூலம் இந்திய அணியின் நீண்ட கால பேட்டிங் சொதப்பலிற்கு ஒரு தீர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இம்மாற்றத்தை நிருபிக்க பல காரணங்கள் உள்ளன.
ஒரு பேட்டிங் வரிசையின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் அந்தந்த இடங்களில் களமிறங்க வேண்டும்
ஒரு அணியில் நம்பர் 4 பேட்டிங் என்பது ஒரு ஸ்பெஷல் பேட்டிங் வரிசையாகும். எனவே இதனை அதற்கு தகுதியான வீரருக்கே வழங்கப்பட வேண்டும். இந்த வரிசை பேட்ஸ்மேன் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரின் பாலமாக செயல்படுவார். ஸ்ரேயாஸ் ஐயரை-ப் போன்ற ஒரு நிலையான மற்றும் சிறந்த பேட்ஸ்மேனால் மட்டுமே ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தாலும் நிலைத்து விளையாட இயலும்.
அத்துடன் பௌலர்கள் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்தால் நம்பர் 4 பேட்ஸ்மேன் கண்டிப்பாக விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவார். இதன் மூலமே ஒரு அணியின் ரன் குவிப்பை கட்டுபடுத்த இயலும்.