சுழற்பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் 71 ரன்களில் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என ஏதுமில்லை. ஆனால் அதிகபடியான சிங்கிள் மற்றும் டபுள்ஸை ரன் ஓட்டத்தின் மூலம் எடுத்தார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா ரன் ஓட்டத்தை எடுக்கத் தவறியதால் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தப்பட்டு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் இணைந்து அதிகபடியான ரன் ஓட்டத்தை மேற்கொண்டார். இதன் மூலம் போட்டி முழுவதுமாக மாற்றமடைந்தது.
ஒட்டுமொத்தமாக ஸ்ரேயாஸ் ஐயர் முதல் 23 பந்துகளில் 25 ரன்களையும், அடுத்த 26 பந்துகளில் 25 ரன்களையும் குவித்தார்.
ரிஷப் பண்ட் தான் எதிர்கொண்ட பந்துகளை மிட் விக்கெட் திசையில் விளாசி ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டு 14 பந்துகளுக்கு 14 ரன்களை அடித்தார். ஆனால் அதன்பின் இவரது பேட்டிங் மங்கி ரோஸ்டன் சேஸ் சுழலில் போல்ட் ஆகினார்.
இறுதியாக ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். இவர் மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 23 டாட் பந்துகளை சந்தித்தார்.
அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அதுவரை மந்தமாக சென்று கொண்டிருந்த அப்போட்டி முழுவதுமாக மாற்றமடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிடில் ஆர்டரில் அதிகபடியான ரன் ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
உலகக்கோப்பை அரையிறுதியில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் மிட்செல் சான்ட்னர் ஓவரில் அதிகப்படியான டாட் பந்துகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டனர். இதனால் தேவையான ரன் ரேட் பன்மடங்கு எகிறியது. அத்துடன் முக்கியமான கட்டத்தில் தங்களது விக்கெட்டுகளையும் இழந்தனர். மேலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பண்ட் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் ரோஷ்டன் சேஸிற்கு எதிராக பயங்கரமாக தடுமாறினார்.
ஒரு நம்பர் 4 பேட்ஸ்மேன் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் சரியாக எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை படைத்திருத்தல் அவசியம். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான பேட்டிங்கை காணும் போது நம்பர் 4ற்கு சரியான வீரர் இவர்தான் என தெரிகிறது.