ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்-டின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள்

Shreyas Iyer
Shreyas Iyer

பெரிய இன்னிங்ஸை விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் சரியானவர்

Iyer
Iyer

டி20 போட்டியுடன் ஓடிஐ போட்டிகளை ஓப்பிடும் போது அதிகப்படியான ஓவர்களை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டும். ஓடிஐ போட்டிகளானது ஒரு பேட்ஸ்மேனின் திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை ஆராய ஏதுவாக உள்ளது. ஒடிஐ கிரிக்கெட்டில் ஒரு பௌலருக்கு 10 ஓவர்கள் பந்துவீச வழங்கப்படுவதால் பேட்ஸ்மேனின் மனநிலையை அவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பேட் செய்ய ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பெரிய இன்னிங்ஸ் விளையாடக்கூடிய வீரர் தேவைப்படுகிறார். மேலும் சொந்த மண்ணாக இருந்தால் பன்மடங்கு சாதகமாகும். இந்த பேட்டிங் வரிசையின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயருக்கு அதிகப்படியான ஓவர்கள் விளையாட வழங்கப்பட வேண்டும்.

விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலையான டாப் இன்னிங்ஸ் விளையாட வேண்டும்

குமார் சங்கக்காரா மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை எளிதாக பௌலர்களிடம் அளித்திடாமல் அதிகபடியான ரன் குவிப்பில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்காலத்தில் அனுபவமில்லா மற்றும் குறைந்த பேட்டிங் திறன் கொண்ட வீரர்கள் இந்த இன்னிங்ஸை தங்கள் அணிக்கு அளிக்கத் தவறுகின்றனர்.

இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய களம் கண்டால் ரிஷப் பண்ட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் 50 ஓவர் வரை நிலைத்து நின்று பேட்டிங் செய்யத் தவறுகிறார். மேலும் தவறான ஷாட் தேர்வை மேற்கொண்டு சொதப்பியும் வருகிறார்.

விக்கெட்டை பறிகொடுக்காமல் பெரிய இன்னிங்ஸை விளையாடிய ஒரே விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இவர் ஓடிஐ-யில் 1500 ரன்களை இறுதி வரை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். மற்ற எந்த ஸ்பெஷலிஸ்ட் இந்திய விக்கெட் கீப்பர்ளும் இச்சாதனையை செய்யவில்லை. தோனி விளையாடியுள்ள 297 ஓடிஐ இன்னிங்ஸில் 48 இன்னிங்ஸில் மட்டுமே நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார்.

எனவே ரிஷப் பண்ட் ஓடிஐ கிரிக்கெட்டில் கடைநிலையில் பேட்டிங் செய்ய தகுதியானவர் ஆவார்.

ஸ்ரேயாஸ் ஐயருடன் ஒப்பிடும்போது ரிஷப் பண்ட் நம்பர் 5 பேட்டிங்கிற்கு தகுதியானவர்

Pant
Pant

ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் நம்பர் 5 அல்லது 6ல் பேட்டிங் செய்ய தகுதியானவர் என்பதை எடுத்துரைக்கிறது. ரன் இலக்கு சற்று அருகில் உள்ளபோது ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். மேலும் இன்னிங்ஸை சிறப்பாக முடிக்க இவரது பேட்டிங் முழுவதும் கை கொடுக்கும்.

ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்டை நம்பர் 4 பேட்டிங்கில் களமிறக்கி இந்திய அணி தவறு செய்து வருகிறது ‌

இவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதன் காரணமாக பௌலர்களுக்கு சரியான திசையில் வீச இவருக்கு சிரமப்படுவர். மேலும் ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்ற ஹீட்டிங் பேட்ஸ்மேன்கள் கடைநிலையில் இருப்பது இந்திய அணிக்கு பலமாகும்.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 4 பேட்டிங்கில் களமிறக்கலாம். இவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்தை சரியாக எதிர்கொண்டு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கடைநிலை ஃபினிஷர்களுக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி தருவார்.

ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் 4ல் களமிறக்கி, ரிஷப் பண்டை நம்பர் 5ல் களமிறக்கினால் இந்திய அணியின் நீண்ட கால பிரச்சினை முடிவுக்கு வரும். இந்த மாற்றம் இரு அணி வீரர்களுக்கும் இடையிலான புரிதல் உணர்வை அதிகரிக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications