சச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு!!

Shikar Dhawan
Shikar Dhawan

ஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான விளையாட்டு அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் அந்த அணி பெரிய இலக்கை அடிக்க முடியும். தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால் அடுத்து விளையாடும் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது என்பது வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி புதிய சாதனையை படைத்துள்ளனர். அந்த சாதனையைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Dhawan And Rohit
Dhawan And Rohit

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.

தவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.

Rohit Sharma
Rohit Sharma

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Sachin And Ganguly
Sachin And Ganguly

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி, சச்சின் மற்றும் சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளனர். சச்சின் மற்றும் சேவாக் ஜோடி இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி 95 ஒரு நாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்து இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சச்சின் மற்றும் கங்குலி. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதுவரை 26 முறை சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications