இந்திய அணியின் அடுத்த கேப்டன் பதவி யாருக்கு தெரியுமா???

rohit -dhoni-virat
rohit -dhoni-virat

இந்திய அணியில் பேட்டிங் பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. கேப்டன் விராத் கோலி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். பேட்டிங்கில் விராத் முக்கிய பங்கு வகிக்கிறார். ரோகித் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் பேட்டியில் ஏமாற்றம் அளித்தார் . தவானின் எழுச்சியே இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்தார். மறுமுனையில் தவான் வெளுத்து வாங்கினார்.

பின் வரிசையில் முன்னாள் கேப்டன் டோனி சிறப்பான பார்மில் உள்ளார். டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பாண்ட் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் அசத்துகிறார். டோனி ரிட்டயர் ஆகும் பட்சத்தில் அணியில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்வார். இந்திய அணியில் தற்போதய கேப்டன் கோலி ஒய்வு பெரும் பட்சத்தில் அணியின் பொறுப்பு ரோகித்திடம் ஒப்படைக்கப்படும். இதுவரை ரோகித் தலைமையில் விளையாடிய ஒரு நாள், டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

rohit sharma
rohit sharma

இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் ரோகித் NO. 2 தரவரிசையில் உள்ளது கேப்டன் பதவிக்கான வாய்ப்பை அதிக படுத்துகிறது. ரோகித் கிரிக்கெட் வரலாற்றில் அதில் சாதனை படைத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் கண்டிராத சாதனை மூன்று முறை 200 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். தவிர அதிக சிக்சர் பவுண்டரிகள் அடித்ததிலும் முதல் இடம் வகிக்கிறார். இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. பின் வரும் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்து அதிலும் சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த கேப்டன் பதவி ரோகித் அதிகமாக உள்ளது. தினேஷ் கார்த்திக் முன்னாள் வீரராக இருந்தாலும் எதிலும் சோபிக்கவில்லை. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் நல்லது. ஹர்திக் பாண்டியா சர்ச்சை காரணமாக தொடரில் இருந்து நீக்க பட்டார். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20, ஒரு நாள், டெஸ்டில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்வார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அடுத்த கேப்டன் பதவிக்கான கணக்கு எடுப்பில் ரோகித் ஷர்மாக்கு அதிக வாக்களிப்பு குவித்துள்ளது. ரோகித் சதம் கடந்து விட்டால் அதை இரட்டை சதமாக மாற்றுவதில் திறமை உள்ளவர். கடைசி பவர் பிளே ஓவர்களில் ரோகித் தனது ஸ்ட்ரைக் பயன்படுத்தி சிக்சர் பவுண்டரி களை அதிகமாக அடித்து தனது ஸ்கோரினை உயர்த்தி விடுவார். அணியின் வெற்றியை உறுதி செய்திடுவார். பின் வரும் போட்டிகளில் ரோகித் கேப்டனாக செயல்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி இந்திய அணிக்கு பெருமை சேர்பார். விரைவில் கேப்டனாக செயல்படுவார்…….. ..

App download animated image Get the free App now