இந்திய அணி ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கேற்ப கூடுதல் வேகத்திற்கும் பௌன்சஸுக்கும் தயாராக உள்ளோம் - ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை நாளை மறுநாள் நடக்க உள்ள டி20 போட்டியின் மூலம் தொடங்க உள்ளது இந்திய அணி. பிரிஸ்பேனில் நடக்க இருக்கும் இப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியில் பல புதுமுகங்கள் இருக்கின்றன சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் முதல் அனுபவம் பெற உள்ளனர் சில இளம் வீரர்கள். தோனி இல்லாமல் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டி20 போட்டிகளில் களம் காண்கிறது இந்தியா. உலக கோப்பைக்கு முன்னால் எஞ்சிய விக்கெட் கீப்பர் களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் இம்முடிவை எடுத்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு.

இந்தியா சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தொடக்கத்தில் சொதப்பி இருந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டது. வழக்கமாக இந்திய ஆடுகளங்களில் பந்தின் வேகம் சற்று மெதுவாகவே காணப்படும், துள்ளலும் சற்று அடங்கியே இருக்கும்.

ஆனால் ஆஸ்திரியாவில் உள்ள ஆடுகளங்களில் பந்தின் வேகம் உச்சகட்டமாக இருக்கும் துள்ளலும் வீரியமடையும். உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வேகமும் பென்ஸும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆடுகளங்களில் தென்படும்.

மற்ற நாடுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது புது யுக்திகளை கையாள்வது கட்டாயம் எனவே சொல்லலாம், குறிப்பாக இந்திய வீரர்கள். ஏனெனில் பேட்ஸ்மேன் பந்தை விரைவாகக் கணித்து ஆட வேண்டும் இல்லையென்றால் வேகத்திற்கு இணங்கப் பந்து பேட்டை தாண்டிச் சென்று விடும், அதேபோலப் பவுலர்களும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பந்தின் கோட்டையும் அகலத்தையும் மாற்ற வேண்டி இருக்கும்.

இதற்கிடையே நேற்று பிரிஸ்பேனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரோகித் சர்மா பங்கேற்றார். அவர் கூறியதாவது “ நாங்கள் இங்கு ஒரு அணியாகப் பங்கேற்று தங்களது குறிக்கோளை இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்” எனக் கூறினார்

மேலும் அவர் கூறியதாவது “ ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த தொடர்களில் பல போட்டிகள் இறுதிவரைக்கும் சென்றன. இத்தொடரில் அவ்வாறு நடக்காமல் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் சிறு சிறு விஷயங்களையும் செதுக்கி வெற்றியைத் தன் வசப்படுத்துவோம்”

“உலகக் கோப்பை வர உள்ள நிலையில் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் சிறப்பாக ஆடுவதால் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அந்தத் தன்னம்பிக்கையை வைத்து உலக கோப்பையை நன்கு எதிர்கொள்ள முடியும்” எனவும் கூறினார்

“ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் பௌலர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளன, குறிப்பாக ஆஸ்திரேலியா கொண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள், ஆடுகளத்தில் அதிக பௌன்ஸரை வீசக்கூடியவர்கள், இந்திய பேட்ஸ்மேன்கள் அவ்வளவு உயரமாக இல்லாததால் பௌன்ஸை எதிர்கொள்ளச் சற்று கடினமாக இருக்கும்” என்று பிட்சின் தன்மையைப் பற்றி ரோஹித் கூறியுள்ளார்

ரோஹித் மேலும் கூறியதாவது “வரும் போட்டிகள் பெரும் சவாலாக இருந்தாலும் நாங்கள் எந்த வித சவாலையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ரோஹித் டெஸ்ட் போட்டியில்
ரோஹித் டெஸ்ட் போட்டியில்

ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் திரும்புவதால் தன்னை நிரூபிக்கப் பல முயற்சிகள் செய்து வருகிறார், இதைப் பற்றி அவர் கூறியதாவது ” நான் லிமிடட் ஓவர்ஸில் நன்றாக ஆடி வந்தாலும் டெஸ்ட் மேட்ச் என்பது மிகவும் சவாலாக இருக்கும் ,முதலில் நடக்க இருக்கும் டி20 போட்டிகளில் தன் கவனத்தை செலுத்தி நன்கு ஆடினால் தன்னம்பிக்கையுடன் அதே ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளிலும் தொடர முயல்வேன்’ என்று கூறியுள்ளார்.

Quick Links