ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். கோழி முடிவுக்கு மகுடம் சேர்ப்பது போல் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அற்புதமாக ஆடி 150 ரன்கள் குவித்தனர். தவான் இந்த தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் பவுண்டரிகளை விளாசி கொண்டிருந்த ரோகித் சர்மா 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 324 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலி அவுட் ஆனவுடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோணி மற்றும் ராயுடு கடைசி ஓரிரு வருடங்களுக்கு மேல் குவித்தனர். 2019-ல் இதுவரை 3 அரை சதங்கள் அடித்துள்ள இந்திய அணி நட்சத்திர வீரர் தோனி இந்த ஆட்டத்தில் 2 ரன்களில் அரை சதத்தை நழுவ விட்டார். சின்ன மைதானத்தில் எளிதாக இந்த இலக்கை அடையலாம் என நினைத்து தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை இழந்து வந்தது. நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இப் போட்டியில் ரோகித் சர்மா தவறவிட்ட மற்றும் புரிந்த சில சாதனைகளை காண்போம்.
300 சிக்சர்கள்:
ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தொடங்கியதிலிருந்து அவரது ஆட்டம் வேற லெவலுக்கு சென்றது. தற்போதைய கிரிக்கெட் உலகில் எந்த பந்துவீச்சாளர் போட்டாலும் அவரை எளிதில் சிக்ஸர் அடிக்க கூடிய ஒரே வீரராக ரோகித் சர்மா திகழ்கிறார். 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை சுமார் 300 சிக்சர்களை அடித்துள்ளார். அணியை சேர்ந்த மார்டின் கப்டில் 178 ஆறுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சேனா நாட்டில் சதம்:
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா,; நியூசிலாந்து, மற்றும் இங்கிலாந்து அணியை கிரிக்கெட் உலகில் ஆங்கிலத்தில் சேனா நாடுகள் என்று அழைப்பார்கள். இந்த நான்கு நாட்டிலும் ஒருநாள் போட்டியில் மூன்று இந்தியர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் தவான் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்கள். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் சதம் அடித்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் வெறும் 13 ரன்களில் அவர் சதத்தை நழுவ விட்டார். அவர் சதத்தை பூர்த்தி செய்திருந்தால் சேனா நாட்டில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நியூஸிலாந்தில் சதம் விளாசும் முதல் இந்தியா கேப்டன் யார்?
மேலும் நியூஸிலாந்து நாட்டில் எந்த ஒரு இந்தியா கேப்டனும் இதுவரை சதம் அடித்ததில்லை . கோஹ்லிக்கு கடைசி இரண்டு போட்டிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கோஹ்லி அந்த சாதனையை படைக்க ஒரு போட்டியே உள்ளது.
இல்லையெனில் கடைசி இரண்டு போட்டியில் ரோஹித் சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது .