இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று புரிந்த 3 சாதனைகள்!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில். இரண்டாவது டி20 போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸன் தங்கள் அணி முதலில் பேட்டிங் ஆடும் என அறிவித்தார். இந்திய அணியின் அற்புதமான பந்து வீச்சினால் நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் குர்நால் பாண்டியா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்ய கிராண்தோம் விரைவிலே அரை சதத்தை எட்டினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 158 ரன்களை குவித்தது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். தவான் தனது பங்குக்கு 30 ரன்களும் பின்னர் வந்த பண்ட் 40 ரன்களும் மற்றும் தோனி 20 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-1 என்று சமநிலை செய்தது.

இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 சாதனைகளைப் புரிந்துள்ளார்.

டி20 போட்டியில் 100 சிக்சர் அடித்த முதல் இந்தியர்
டி20 போட்டியில் 100 சிக்சர் அடித்த முதல் இந்தியர்

1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்த முதல் இந்தியர்:

இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 98 சிக்சர்களை அடித்து இருந்தார். இன்றைய போட்டியில் மொத்தம் அவர் 4 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கேல் மற்றும் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் ஆகியோர் 103 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இன்னும் 2 சிக்சர்கள் அடித்தால் ரோகித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறுவார்.

2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:

ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 33 ரன்கள் எடுத்திருந்த போது டி20 கிரிக்கெட் போட்டியில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த மார்டின் கப்டில் அவர்களின் சாதனையை முறியடித்தார். இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி 2,167 ரன்கள் அடித்து நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் சாதனையை முறியடித்தார் ரோகித்
கோலியின் சாதனையை முறியடித்தார் ரோகித்

3. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் கடந்த வீரர்:

இன்றைய போட்டியில் அரை சதம் அடித்ததின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 20-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 16 அரை சதங்களும் மற்றும் 4 சதங்களும் அடங்கும். இதன்மூலம் 19 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

Quick Links

App download animated image Get the free App now