இந்திய அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணி துணை கேப்டனுமான ரோஹித் சர்மா இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர். ரோஹித் சர்மா இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒரு நாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஓரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த விரர் ( 264 ) என்ற பெருமைக்குறியவர். மற்றும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இதுபோன்று இன்னோரு சாதனைக்கும் சேர்த்துள்ளார். அது என்வென்றால் இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இதுவரை நான்கு முறை சதம் அடித்துள்ளார். நான்கு முறையும் இந்திய அணி தோல்வியே அடைந்துள்ளது. ரோஹித் சர்மா முதல் முறையாக 2015 ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு கிரிக்கேட் தொடரில் விளையாடியது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதியது இந்த போட்டியில் தான் ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா 138 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 171 ரன்களை அடித்து அசத்தினார் இந்திய அணி 309 ரன்களை சேர்த்தது. ஆனால் இந்த இலக்கினை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 310 ரன்களை அடித்து வெற்றி பெற்றது . அதே தொடரில் இரண்டாவது போட்டி ப்ரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 124 ரன்களை அடித்து அசத்தினார். இந்திய அணி 308 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 309 ரன்களை அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. அதே தொடரில் ஐந்தாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 330 ரன்களை அடித்தது பின்னர் களம் இந்திய அணியில் ரோஹித் சர்மா 99 ரன்னில் சதம் அடிக்காமல் தனது விக்கெடை இழந்தார். இந்த போட்டியில் மனிஸ் பான்டேவின் சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனைதொடர்ந்து தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடியது முதல் போட்டி சிட்னியில் நடைபெற்றது இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 288 ரன்கள் அடித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 133 ரன்களை அடித்தார் . ஆனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் முலம் இதுவரை ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை அடைந்துள்ளார். வரும் நாட்களில் இதனை முறியடிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.