கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வைத்திருந்தவர் வெஸ்ட்இண்டீஸ்அணியை சேர்ந்த கிறிஸ் கெயில். ஆனால் தற்போது இந்த சாதனையை நம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்த சாதனையை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருபவர் கிறிஸ் கெயில் தான். அதற்கு காரணம் அவரது அதிரடி ஆட்டம் தான். அதிக சிக்சர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார் கிறிஸ் கெயில். ஆனால் தற்போது இந்த சாதனையை நம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

நம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றைய முன் தினம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை விளாசினார். அதுமட்டுமின்றி இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ரோகித் சர்மா 7 சிக்ஸர்களை விளாசி சதம் அடித்தார். ஆக மொத்தம் இந்த ஒருநாள் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 9 சிக்சர்களை விளாசினார். ஏற்கனவே ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 80 சிக்ஸர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோகித் சர்மா அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 89. இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புது சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 210 ஆகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஒருநாள் போட்டியில் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 219 ஆகும். இதன் மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் தோனி.
மூன்றாவது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த ஜெயசூர்யா உள்ளார். ஒருநாள் போட்டியில் இதுவரை இவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 270 ஆகும். இதன்மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ஜெயசூர்யா. இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். ஒருநாள் போட்டியில் இவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 275 ஆகும். எனவே இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி உள்ளார். இதுவரை இவர் 351 சிக்ஸர்களைஅடித்துள்ளார். எனவே இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.