தற்போதைய கால கட்டத்தில் உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன் ரோஹித்சர்மா மற்றும் விராட் கோலி ஆவார்கள். இவ்விருவரும்தான் ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்து உள்ளனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார்,அவ்வப்போது சீராக சதங்களை கடப்பதே முக்கிய காரணம் அவரை தொடர்ந்து துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இரண்டாம் இடத்தை ஆக்கிதமித்துள்ளார். ரோகித் சர்மா, இந்தியா கடைசியாக ஆடிய பத்து தொடர்களிலும் குறைந்தபட்சம் ஒரு சதமாவது அடித்து உலகசாதனை படைத்திருந்தார். ஆனால் அந்த சாதனை நியூசிலாந்து தொடரில் முடிவுற்றது, இந்த தொடரில் ரோஹித் சர்மா ஒரு சதம் கூட அடிக்காத காரணத்தால் அந்த சாதனை முடிவுற்றது.
இந்தியா, நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இந்த மூன்று ஆட்டங்களுக்கு பிறகு கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மீதமிருந்த இரண்டு ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டி தரவரிசையில் 896 புள்ளிகளை கொண்டிருந்தார். அதே சமயம் ரோகித் சர்மா 876 புள்ளிகளை கொண்டிருந்தார், இருவருக்கும் வெறும் 20 புள்ளிகளே வித்தியாசம்.கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாத காரணத்தால் கோலிக்கு 9 புள்ளிகள் குறைக்கபட்ட நிலையில் ரோகித் சர்மாவுக்கு முதலிடத்தை பிடிக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்தது. தனது 200 ஆவது ஒரு நாள் போட்டியில் கேப்டனாக களம் இறங்கிய ரோகித் சர்மா 7 ரன்னுக்கு அவுட் ஆனார், இந்திய அணியும் 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி தோல்வியை தழுவியதோடு வரலாற்றில் மோசமான தோல்வியையும் பதிவு செய்தது பின்னர் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இரண்டு ரன்னுக்கு வெளியேறினார் ரோகித் சர்மா, எனினும் அப்போட்டியை வென்றது இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..நடந்து முடிந்து இரண்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு சதம் அடித்திருந்தால் கூட கோலியை கடந்து முதன் முறையாக ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இரண்டு போட்டிகளிலும் தலா 7, 2 ரன் எடுத்து அருமையான வாய்ப்பை தவறவிட்டார், அது மட்டுமில்லாமல் அதிக புள்ளிகளையும் இழந்தார்.
தற்போது விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அவருக்கு பின் ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆனால் முதலிடத்துக்கான போட்டி இன்னும் முடியவில்லை அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் விளையாட இருக்கிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு மீண்டுமொரு வாய்ப்பு இருக்கிறது முதலிடத்தை பிடிப்பதற்கு.
இவர்களுக்கு இடையேயான இந்த போட்டி இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கிறது. இதே வேகத்துடன் உலககோப்பையில் களம் இறங்கினால் இந்திய அணி மூன்றாவது முறையாக உலககோப்பையை வெல்வதை யாராலும் தடுக்கமுடியாது.