இரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!!!

Rohit sharma
Rohit sharma

இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் துணை கேப்டன், தற்போதைய காலகட்டத்தின் தலைசிறந்த துவக்க வீரர், இரட்டை சத்தங்களை மூன்று முறை குவித்த ஒரே நாயகன் என பல சாதனைகளை படைத்துள்ள ரோஹித் சர்மா தனது ஆரம்ப காலகட்டங்களில் சந்தித்த இன்னல்களையும் அவர் கடந்து வந்த பாதையை பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

ரோஹித் சர்மா 2007 ஆம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிவிட்டார். அப்போதைய காலங்களில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டிகளில் இவர் களமிறங்கி விளையாடி வந்தார். அதே ஆண்டு இவர் டி 20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடத் துவங்கினார். இவர் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் இந்திய அணியில் சச்சின், சேவாக், யுவராஜ், டிராவிட் என பல முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்கு களமிறங்க வாய்ப்பு கிடைப்பதே அரிது தான். இதனால் இவரால் அந்த அளவுக்கு சோபிக்க முடியவில்லை. ஏன் 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் கூட இவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் அப்போது இவருக்கு போட்டி தினேஷ் கார்த்திக் தான். இருவரையும் மாறி மாறி களமிறக்கி பரிசோதித்தது இந்திய அணி. அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் சொதப்பவே இறுதி போட்டியில் விளையாட அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை தேர்வுசெய்தது நிர்வாகம். அந்த போட்டியில் இவர் தான் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் காம்பிருக்கு அடுத்தபடியாக இருப்பார். மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க இவர் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவரும் முக்கிய காரணமே.

அதன் பின் இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த இவரால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாமல் போனது இதனால் பல போட்டிகளில் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார்.

அவ்வளவு தான் இவரின் கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்து விட்டது என அனைவரும் கருதிய நேரத்தில் இவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோணி தான். இவரிடம் உள்ள திறமையை உணர்ந்த அவர் இவரை துவக்க வீரராக களமிறக்கினால் சிறப்பாக விளையாடுவார் என கருதி இவருக்கு இந்திய ஒருநாள் அணியில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பளித்தார்.

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ரோபி தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அப்போதைய தேர்வுக்குழு இவரை ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மானாகவே அணியில் தேர்வு செய்தது. அந்த அணியில் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் என துவக்க வீர்ரகள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் முரளி விஜய் தான் ஷிகர் தவனுடன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். இவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே 19 ரன்கள் தான் எடுத்தார். ஆனால் ரோஹித் ஷர்மாவும் பெரிதாக சோபிக்கவில்லை இவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 15 ரன்கள் தான் எடுத்தார்.

Rohit sharma's first match as openner
Rohit sharma's first match as openner

எனவே முதல் போட்டியில் பார்மில் இல்லாத முரளி விஜயை எப்படி களமிறக்குவது என பல சர்ச்சைகள் எழுந்தது. அந்த சமயத்தில் தான் தோணி ரோஹித் மீது நம்பிக்கை வைத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் துவக்க வீரராக களமிறக்கினார். அது பலரையும் வியக்க வைத்தது. அந்த போட்டியில் ரோஹித் 65 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அந்த தொடர் முழுவதும் இவரே துவக்க வீரராக களமிறங்கினார்.

அதிலிருந்து தற்போது வரை எவராலும் அசைக்க முடியாத உலகின் தலைசிறந்த துவக்க வீரராக விளங்கி வருகிறார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 209 ரன்கள் குவித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்போது வரை சச்சின் மற்றும் ஷேவாக் இருவர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தனர். இதன் மூலம் அந்த பட்டியலில் மூன்றாவது நபராக நுழைந்தார் ரோஹித். அதற்கடுத்த ஆண்டே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 264* ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. பின்னர் 2017-ல் அதே இலங்கை அணிக்கு எதிராக 209 ரன்கள் குவித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

Rohit scored 5 tons in 2019 wc
Rohit scored 5 tons in 2019 wc

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலும் அதிவேகமாக சதமடித்த வீரர் ( 35 பந்துகள் ), டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சதமடித்த வீரர் ( 4 சதம் ) என பல சாதனைகளை படைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் கூட 5 சதங்கள் விளாசி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தனவாசமாக்கினார் இவர். சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக மூன்றுமுறை கோப்பைகளை வென்றுள்ளார் ரோஹித். இது வெறும் ஆரம்பமே இவர் தான் ஓய்வு பெறுவதற்க்குள் பெரும்பாலான சாதனைகளை முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil