அதிலிருந்து தற்போது வரை எவராலும் அசைக்க முடியாத உலகின் தலைசிறந்த துவக்க வீரராக விளங்கி வருகிறார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 209 ரன்கள் குவித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்போது வரை சச்சின் மற்றும் ஷேவாக் இருவர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தனர். இதன் மூலம் அந்த பட்டியலில் மூன்றாவது நபராக நுழைந்தார் ரோஹித். அதற்கடுத்த ஆண்டே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 264* ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. பின்னர் 2017-ல் அதே இலங்கை அணிக்கு எதிராக 209 ரன்கள் குவித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலும் அதிவேகமாக சதமடித்த வீரர் ( 35 பந்துகள் ), டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சதமடித்த வீரர் ( 4 சதம் ) என பல சாதனைகளை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் கூட 5 சதங்கள் விளாசி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தனவாசமாக்கினார் இவர். சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக மூன்றுமுறை கோப்பைகளை வென்றுள்ளார் ரோஹித். இது வெறும் ஆரம்பமே இவர் தான் ஓய்வு பெறுவதற்க்குள் பெரும்பாலான சாதனைகளை முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.