#2.எவ்வகை சூழ்நிலைகளையும் திறம்பட கையாளும் ரோகித்:
ஆட்டத்தின் எவ்வகை நேரங்களிலும் எவ்வகை சூழ்நிலைகளிலும் தம்மை ஈடுபடுத்தி வெற்றி காண்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார், ரோகித் சர்மா. இதற்கு உதாரணமாக, தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் ரோஹித் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்கள் வரை சில போட்டிகளில் நின்றுள்ளார். மூன்றாவது முறையாக இவர் இரட்டை சதம் கண்ட போதும் கூட ஆட்டத்தின் கடைசி ஓவரில் தான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்கம் நேரங்களில் இந்திய அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்த போதிலும் நம்பிக்கை தளராது தொடர்ந்து ரன்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்துவார், ரோஹித். ஒரு தொடக்க ஆட்டக்காரராக பொறுமையாக ரன்களை குவிக்காமல் தொடர்ந்து அதிரடி பாணியை கையாள்கிறார், ரோகித் சர்மா. தொடக்க ஆட்டத்தை தமக்கு சாதகமாக மாற்றும் திறன் மற்றும் இறுதிக்கட்ட நேரங்களில் அசுரத்தனமான அதிரடியை கையாளும் திறன் என பொதுவாக இவரின் ஆட்டத்தை இருவகையாகப் பிரிக்கலாம்.
#1.திடமான வியூகம் மற்றும் நேர்மறையான அணுகுமுறை:
உலகத்தரமான பேட்ஸ்மேனாக திகழும் ரோகித் சர்மா, பந்துவீச்சாளர்கள் எதிராக சிறப்பாக எதிர்கொள்ளும் திறன்களை தக்க நேரத்தில் வெளிப்படுத்தி அவற்றை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாய் மாற்றியுள்ளார். பெரும்பாலும் இவரது பேட்டிங்கில் நின்று கொண்டிருக்கும் வேளையில், பந்து வீசுவதற்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் சற்று தயங்குவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பந்தின் நேர்கோட்டை நன்கு அறிந்து தகுந்த ஷாட்களை தேர்ந்தெடுப்பதில் மற்ற வீரர்களை விட சற்று மாறுபட்டு உள்ளார், ரோகித் சர்மா. ஷார்ட் வகை பந்துகளையும் கூட எளிதாக கையாண்டு அவற்றை எல்லைக் கோட்டிற்கு வெளியே பல முறை அனுப்பி உள்ளார். மேற்கண்ட காரணங்களாலே உலகின் அபாயகரமான வீரராகவும் ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறை இரட்டை சதம் கண்ட ஒரே வீரர் என்னும் இமாலய சாதனையை கூட தன்னகத்தே வைத்துள்ள ரோகித் சர்மா. இன்னும் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றியை தீர்மானிப்பார் என நம்பலாம்.