பண்ட், தினேஷ் கார்த்திக்கை மாற்ற உள்ளோம் – ரோகித்!!

Rohit Sharma
Rohit Sharma

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை பற்றியும், இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியவை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

Seifert
Seifert

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முண்ரோ மற்றும் செய்ஃபர்ட் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய முண்ரோ 2 சிக்சர்களை விளாசினார். பின்பு 34 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய செய்ஃபர்ட் அரை சதம் விளாசினார்.

சிறப்பாக விளையாடிய இவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகி வெளியேறினார். இவர் 6 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய குகலீன் வெறும் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.

Newzealand Cricket Team
Newzealand Cricket Team

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு தவான் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். பின்பு இவரும் 29 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய தவறினர். குறுகிய இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை அடித்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி என்பது ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Rishab Phant And Dinesh Karthik
Rishab Phant And Dinesh Karthik

இந்திய அணியின் இந்த அபார தோல்விக்குப் பின்னர் கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்னவென்றால், "தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்து விட்டால், அதன் பின்பு நிலைத்து நின்று விளையாடும் அளவிற்கு எந்த வீரர்களும் அணியில் இல்லை. அதன்பின்பு தினேஷ் கார்த்திக் இரண்டு கேட்சிகளை தவற விட்டார். அதுவும் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம். மேலும் அடுத்து நடைபெற உள்ள இரண்டாவது டி-20 போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கு பதிலாக மாற்று வீரர்களை களமிறக்க உள்ளோம்" என்று கூறினார் ரோகித் சர்மா.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications