கதை என்ன?
ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான தனது சதத்துடன், ரோகித் சர்மா ஒரு இந்தியரால் உலகக் கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக எண்ணிக்கையிலான சதங்களை பெற்ற சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால்…
2003 உலகக் கோப்பையின் பதிப்பில் சவுரவ் கங்குலி மூன்று சதங்களை அடித்துள்ளார். அந்தாண்டு இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் கங்குலி. இந்த சாதனையை வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் படைக்கவில்லை. இந்திய அணியின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட இந்த சாதனையை படைக்க தவறிவிட்டார். இவர் பல போட்டிகளில் 90 ரன்னகளிலே வெளியேறி இருக்கிறார்.
கதைக்கரு
இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 338 ரன்கள் இலக்கை நோக்கி தனது பேட்டிஙை தொடங்கியது. இதில் கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாட தொடங்கினர். 3வது ஓவரை வீசிய கிறஸ் வோக்ஸ் கே.எல் ராகுல் விக்கெட்டை பெற்றார். இதன் பின் ரோகித் சர்மா விராட் கோலியுடன் ஜோடி சேரந்து சிறப்பாக விளையாடினர். இவர்களின் ஜோடியில் இந்திய அணி 138 ரன்கள் குவித்தனர். இந்த ரன்கள் இந்திய அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது.
விராட் கோலி 66 ரன்கள் குவித்து 29வது ஓவரை வீசிய பிளெங்கெட்யிடம் விக்கெட் இழந்தார். இதன் பின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரோகித் சர்மா ரிஷப் பண்ட் உடன் கொண்ட ஜோடியில் தனது 3வது சதத்தை நிறைவு செய்தார். ரோகித் சர்மா தனது முதல் சதத்தை தென்னாப்பிரிக்கா அணியிடனும், இரண்டாவது சதத்தை பாகிஸ்தான் அணியிடனும் நிறைவு செய்தார். இவர் தற்போது சிறந்த நிலையில் இருக்கிறார் இந்திய அணியின் தொடக்க நிலையில் ரன்கள் குவிக்க பக்கபலமாக இருக்கிறார்.
இந்திய அணி இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் 2 புள்ளிகள் மட்டும் தேவைப்படுகிறது. இங்கிலாந்திற்கு எதிராக தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 31 ரன்களில் தோல்வியை அடைந்தனர். இது நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் தோல்வியாகும். ஆனால் இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இரண்டு புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
அடுத்து என்ன ?
ஜூலை 2 ஆம் தேதி இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டியிலும் ஹிட்மேன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு சதம் அடிப்பார் என்று எதிரபார்க்கப்படுகிறது. நேற்று இங்கிலாந்து எதிரான போட்டியில் ரன்கள் ரிஷப் பண்ட் 32 ரன்கள் குவித்திருந்தார்.