ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு

Rohit Sharma
Rohit Sharma

இந்தியா A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையேயான நான்கு நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்தியா A அணிக்கு தேர்வு செய்ய பட்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஓய்வு அளிக்க பட்டுள்ளது.

இது பற்றி கேட்கையில் அதிக வேலைப்பளு காரணமாக அவருக்கு சிறிது ஓய்வு தேவை என பிசிசிஐ மருத்துவ தணிக்கை குழுவினாரால் அறிவுறுத்தபட்டுள்ளது.

நவம்பர் 16 முதல் இந்தியா A மற்றும் நியூசிலாந்து A அணிகள் பங்கு பெறும் 3 நான்கு நாள் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த அணியை அஜன்கியா ரஹானே வழிநடத்தவுள்ளார்.

இளம்ன்வீரரான ப்ரித்திவி ஷா, முரளி விஜய், பார்திவ் படேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் வெளுத்து வாங்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணிகளில் இடம் பெறுவதே மிக கடினம். நடக்கவிறுக்கும் இந்தியா A மற்றும் நியூசிலாந்து A மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு ஓய்வு அளிக்க பட்டுள்ளது. அது பற்றி காண்போம்.

ரோஹித் சர்மா ஓய்வு குறித்து கேட்கையில்

அதிக வேலைப்பளு காரணமாக அவருக்கு ஓய்வு அளிப்பதாக பிசிசிஐ மருத்துவகுழு மற்றும் நிர்வாக குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

ரோகித் சர்மா அடுத்து நடக்கும் இந்தியா ஆஸ்திரேலியா டி-20 தொடரில் பங்கேற்க நவம்பர் 16 அன்று இந்திய அணியுடன் இணைந்து மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா செல்கின்றார். நடந்து முடிந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரின் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் “தற்போதக்கு டெஸ்ட் தொடர் பற்றி எதுவும் சிந்திக்க வில்லை, சிறிது ஓய்வெடுத்து மனதை சமநிலையில் வைத்திருத்தல் அவசியம் என குறிப்ப்டிருந்தார்”

டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தேர்வு செய்ய பட்டுள்ளார்.பல நாட்களுக்கு பிறகு ரோகித் சர்மா இந்தியா டெஸ்ட் அணியில் தேர்வு செய்யபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை ரோகித் சர்மா மொத்தம் 25 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியுள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார், இருப்பினும் அவருக்கு டெஸ்ட் தொடர்களில் அதிக வாய்ப்புகள் கிடப்பதில்லை.ஒரு நாள் போட்டியில் தனி நபராக அதிகபட்ச ஸ்கோர் குவித்த சாதனை மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த சாதனையையும் தன் வசம் வத்துள்ளார்.

கடைசியாக இந்தியா ஆப்கானிஸ்தான் ஆடிய தொடர் மற்றும் ஆகஸ்ட்டில் நடபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ச் தொடரில் கூட ரோகித் சர்மா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil