நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆன்ரிவ் ரஸல் பங்கேற்கமாட்டார் - ஜேஸன் ஹோல்டர்

Jason Hopder & Andrew Russell
Jason Hopder & Andrew Russell

எதிர்வரும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆன்ரிவ் ரஸல் பங்கேற்க மாட்டார் என மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் உறுதி செய்துள்ளார். உலகக்கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ரஸல் பங்கேற்பார் என எதிர்பார்த்த போது உடற்தகுதியின்மை காரணமாக தற்போது விலகியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் தற்போது உள்ள உடற்தகுதியின் படி விளையாடினால் கண்டிப்பாக எப்போது வேண்டுமானாலும் களத்திலிருந்து வெளியேறலாம். ஆன்ரிவ் ரஸல் கடந்த மூன்று போட்டிகளிலும், பேட்டிங், பௌலிங்கில் கடுமையாக சொதப்பினார்‌. அத்துடன் முட்டியில் ஏற்பட்ட வலியால் சரியான ஃபீல்டிங்கையும் இவரால் செய்ய முடியவில்லை.

மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் சற்று வலுக்கட்டாயமாக ஆன்ரிவ் ரஸலை களமிறக்கியது. ஆனால் அவரது உடற்தகுதி ஆதரவளிக்காத காரணமாக கடந்த போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார்‌. எனவே அணி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு தற்போது அவருக்கு ஓய்வளித்துள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் ரஸல் பங்கேற்க மாட்டார் என கேப்டன் ஜேஸன் ஹோல்டர் தற்போது உறுதி செய்துள்ளார். வங்கதேசத்தின்கு எதிரான போட்டியில் 321 ரன்களை அடித்த மேற்கிந்தியத் தீவுகள் மோசமான பௌலிங் காரணமாக தோல்வியை தழுவியது. இப்போட்டியில் ஆன்ரிவ் ரஸல் ரன் ஏதும் அடிக்காமல் டக்-அவுட் ஆனார்.

"மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது வரை சில இடர்பாடுகள் இருந்து வருகிறது. அந்த இடர்பாடுகளை களைய முயற்சி செய்து வருகிறோம். அதன்படி பார்த்தால் ஆன்ரிவ் ரஸல் கண்டிப்பாக நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார். இவர் அடுத்த போட்டியில் விளையாட உடற்தகுதி ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் மற்ற வீரர்கள் ரஸல் இல்லாத இடத்தை நிரப்பி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள்."

ஆன்ரிவ் ரஸல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும். இருப்பினும் கடந்த போட்டிகளில் காயம் காரணமாக அவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை, அத்துடன் இந்த முடிவை மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் எடுத்தது சரியானதே ஆகும். ஆல்-ரவுண்டரான ஆன்ரிவ் ரஸல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பவர் ஹீட்டிங் ஷாட்களை விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

2019 உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள மேற்கு இந்திய தீவு 3 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வியை அடைந்தால் கண்டிப்பாக வெளியேறிவிடும். இதனை தடுக்க அந்த அணி கண்டிப்பாக முயற்சி செய்யும். நியூசிலாந்து உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்து உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளுள் இந்த அணியும் ஒன்றாக உள்ளது. இருப்பினும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் 421 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நம்பிக்கை நிச்சயம் அந்த அணிக்கு கை கொடுக்கும்.

பயிற்சி ஆட்டம் குறித்து ஜேஸன் ஹோல்டர் தெரிவித்தவதாவது,

இது எங்கள் அணியின் முழு வலிமையை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்கள் எடுத்த அதே முடிவை கொண்டும், இந்தப் போட்டியில் நாங்கள் செய்ததை தான் வருங்காலங்களிலும் செய்யப்போகிறோம். இது ஒரு முன்மாதிரியாகவும், எங்களிடம் இதைவிட அதிக ரன்களை குவிக்கும் திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். நாங்கள் எங்கள் அணி வீரர்களுடன் கலந்துரையாடி சரியான திட்டம் வகுத்து செயல்படுத்துவோம்.

Quick Links