பாகிஸ்தான் அணி தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. அறிமுக வீரரான ஓலிவேர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். தென்னாப்ரிக்க அணி கோப்பையை வென்று அசத்தியது.
பின்னர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவித்தது தென்னாப்ரிக்கா. இதில் டி காக், டேல் ஸ்டைன் போன்ற பெரிய வீரர்களுக்கு ஓய்வை அறிவித்து அணியை அறிவித்தது தென்னாப்ரிக்கா. இதன் படி முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி அணி வீரர் அம்லா சதமடித்தும் அது வீணாகி பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இரண்டாம் ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி பாகிஸ்தான் அணியை 203 ரன்னில் ஆல் அவுட்டாகினர். இந்த சிறிய இலக்கினை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொல்லை தந்தனர். இதனால் 100 ரன்னுக்குள் 5 விக்கெட்களை இழந்து திணறியது தென் ஆப்பிரிக்கா. அந்த சமயத்தில் பேட்ஸ்மேன துஸன் மற்றும் ஆல் ரவுண்டர் பிலக்வாயோ பார்ட்னர்சிப் அமைத்து இறுதி வரை அவுட்டாகமல் ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இப்போட்டியில் தென்ஆப்பிக்கா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனால் தொடரை சமன் செய்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டரான பிலக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவ்வாறு அணியின் விக்கெட் கீப்பர் க்லாசன் சரியாக விளையாடாதது மற்றும் பேட்டிங் சரியில்லாதது ஆகிய காரணங்களால் ஓய்வு கொடுக்கப்பட்ட டீ காக் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் பந்து வீச்சு சரியில்லாததன் காரணத்தினால் பாகிஸ்தான் வீரர்கள் இலக்கை எளிதில் துரத்தினர். அதனால் இந்தமுறை அறிவித்தப்பட்டுள்ள அணியில் டேல் ஸ்டைன் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் விவரம்:
டூ பிளசிஸ் ( கேப்டன் ), ஹாசிம் அம்லா, குயின்டன் டீ காக், பிரான் ஹென்ரிக்ஸ், ரீஷா ஹென்ரிக்ஸ், இம்ரான் தாகிர், அடின் மார்க்ரம், டேவிட் மில்லர், பிலுக்வாயோ, ரபாடா, சாம்ஷி, டேல் ஸ்டைன், துஸுன்.
இவ்வாறு அணியில் ஹென்ரிக் க்லாசன் -க்கு பதிலாக குயின்டன் டீ காக் சேர்க்கப்பட்டுள்ளார். டீ காக் – ன் அதிரடியால் தென்னாப்ரிக்க அணிக்கு வெற்றியை சுலபமாக்குவார். டேனி பேட்டிர்சன்-க்கு பதிலாக அனுபவ வீரர் டேல் ஸ்டைன் அணிக்கு திரும்புகிறார். முகமது ஹபீஸ் -யை அதிக முறை விக்கெட் எடுத்த வீரர் ஸ்டைன். முதல் போட்டியில் ஸ்டைன் இல்லாததால் முகமது ஹபீஸ் அரைசதம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். எனவே இம்முறை அணியில் ஸ்டைன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அணியில் ஓலிவோர்-க்கு பதிலாக பிரான் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் ஜனவரி 25 அன்று துவங்குகிறது. இரு அணிகளும் ஏற்கனவே தொடரை 1-1 என சமநிலையில் உள்ளதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.