தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது . அதில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி வாகை சூடியது . அதன் பின்னர் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இவ்விரு அணிகளும் மோதுகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவது பாகிஸ்தானிற்கு கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் போட்டியில் பரபரப்பு இருக்கும். இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் டீ-காக் மற்றும் ஸ்டைன் இருவரும் ஒய்வு அளிக்கபடடுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அம்லா மற்றும் ஹென்ரிக்ஸ் களம் இறங்கினர் . நிலைத்து விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெடிற்கு 82 ரன்கள் சேர்த்தது . ஹென்ரிக்ஸ் 45 ரன்கள் எடுத்த போது ஷாத் கான் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய வன் – டீர்- தூஸ்சென் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி நிலைத்து விளையாடியது பாகிஸ்தான் அணியினர் இவர்களின் பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் தவித்தது . இந்த ஜோடி பாகிஸ்தான் பவுலர்களின் பந்துகளை தெறிக்கவிட்டனர். இந்த ஜோடி 2 வது விக்கெடிற்கு 155 ரன்கள் சேர்த்தனர் . இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தினால் 46 வது ஒவர் வரை விக்கெட் இழக்காமல் இருந்தனர். வன் -டீர்-தூஸ்சென் 93 ரன்களில் ஹாசன் அலி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். தனது முதல் போட்டியில் சதத்தை தவறவிட்டார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அம்லா தனது 27 வது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் களம் இறங்கிய மில்லர் 16 ரன்களும், அம்லா 108 ரன்களுடன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஒவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 266-2 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி.
பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது அதன் படி முதல் களம் இறங்கிய பக்கர் ஜமான் மற்றும் இமாம் - உல்- ஹாக் இருவரும் முதல் விக்கெடிற்கு 45 ரன்கள் சேர்த்தனர் . பக்கர் ஜமான் 25 ரன்களில் ஒலிவேர் பந்தில் தனது விக்கெட் இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாமும் இமாமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . பாபர் ஆசாம் 49 ரன்கள் எடுத்து ஹென்ரிக்ஸ் பந்தில் விக்கெட் இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹபிஸ் நிலைத்து விளையாடினார். இமாம் -உல்- ஹாக் 86 ரன்களில் ஒலிவேர் பந்து வீச்சில் விக்கெட் இழந்தார் . அதன் பின்னர் வந்த மாலீக் 12 ரன்னிலும் , கேப்டன் ஷப்ராஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து தனது விக்கெட்டை இழந்தனர் .
எனினும் நிலைத்து விளையாடிய ஹபிஸ் அரைசதம் விளாசினார். பின்னர் களம் இறங்கிய ஷாத் கான் உதவியுடன் ஹபிஸ் -ஷாத் கான் ஜோடி வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்ட நாயகனாக கடைசி வரை ஆட்டம் இலக்காமல் இருந்து 71 எடுத்த ஹபிஸ் தேர்ந்தேடுக்கபட்டார்.