தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்றது . ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் பாக்ஸ்தான் திரில் வெற்றி பெற்றது . முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி செய்த தவறுகளான ரன் ரேட் உயர்த்தாமல் விக்கெட் இருந்ததும், பொறுமையாக விளையாடியதும் தென் ஆப்ரிக்கா பவுலர்கள் விக்கெட் எடுக்காததும் தான் காரணம் என கூறப்பட்டது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் இரண்டாவது போட்டியை எதிர்கொண்டது. தென் ஆப்ரிக்கா சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்று களம் கண்டது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதலிலே தடுமாறியது. முதலில் களம் இறங்கி இமாம் -உல்-ஹாக் பாகிஸ்தானின் சமிபத்திய நம்பிகை நாயகனாக இருந்தார். இவர் வந்த வேகத்தில் 5 ரன்களில் ரபாடா வேகத்தில் வீழ்ந்தார். பின்னர் வந்த பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் தனது விக்கெட் வந்த வேகத்தில் ரபாடாவிடம் தன் விக்கெட்டை இழந்து நடையை கட்டினார். பாகிஸ்தான் 37 ரன்களில் இரண்டு விக்கேட்களை இழந்து தடுமாறியது. முகமது ஹபிஸ் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் என்பதால் அவர் மிது எதிர்பார்பு அதிகரித்தது. ஆனால் அவரும் வந்த வேகத்தில் 9 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பாகிஸ்தானின் முத்த வீரர் மாலிக் தனது அனுபவத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை மீட்டெடுப்பார் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் மாலிக் சிறிது நேரம் தாக்குபிடித்தார். மறுமுனையில் விளையாடிய பக்கர் ஜமான் பொறுமையுடன் ஆடிய நிலையில் தென் ஆப்ரிக்காவின் இளம் வேகபந்து வீச்சாளர் ஒலிவேர் பந்தில் 26 ரன்னில் தனது விக்கெடை இழந்தார்.
பின்னர் களம் கண்ட ஷாத் கான் சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் 18 ரன்னில் ஷாம்ஷி பந்தில் அவுட் ஆகினார். இந்த போட்டியில் புதியதாக களம் இறங்கிய தாலட் 2 ரன்னில் அதே ஷாம்ஷி பந்தில் விக்கெட் இழந்தார். பின்னர் பொறுமையாக விளையாடி மாலிக் 21 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். 112-8 என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தானை பின்னர் ஜோடி சேர்ந்த ஷப்ராஸ் மற்றும் ஹஷான் அலி இருவரும் 9 வது விக்கெடிற்கு 90 ரன்களை சேர்த்தனர். அரைசதத்தை கடந்த ஹஷான் அலி 59 ரன்னிலும் ஷப்ராஸ் 41 ரன்னிலும் பெலுக்வாயோ பந்தில் தொடர்ந்து அவுட் ஆகினர். அனைத்து விக்கெடுகளையும் இழந்த நிலையில் 203 ரன்களை எடுத்தது. தென் ஆப்ரிக்காவிற்கு 204 ரன்களை இழக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.
தென் ஆப்ரிக்கா அணி தனது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அம்லா மற்றும் கென்ரிக்ஸ் மற்றும் டுப் ப்ளஸ்சிஸ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் அப்ரிடியின் வேகத்தில் வீழ்ந்தனர் . 29-3 இந்த நிலைக்கு தென் ஆப்ரிக்கா தள்ளபட்டது. பாகிஸ்தான் கை ஓங்கியது.
பின்னர் வந்த தூஸ்ஸன் நிலைத்து விளையாட மறுபக்கம் பாகிஸ்தான் விக்கெட்டை சரித்தது. மில்லர் 31ரன்களை எடுத்து அவுட் ஆகினார் . அதே ஒவரில் அடுத்த பந்தில் கோல்டன் டக் ஆனார் கிளாஸ்சன் . இருவரும் ஷாத் கான் பந்தில் விக்கெட் இழந்தனர். 80-5 என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா அணி பின்னர் ஜோடி சேர்ந்த பெலுக்வாயோ உடன் தூஸ்ஸன் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி கடைசி வரை விக்கெட் இழக்காமல் 204-5 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. தூஸ்ஸன் 80 ரன்னும், பெலுக்வாயோ 69 ரன்னும் எடுத்தனர். தொடர் 1-1 என்ற நிலையில் சமன் செய்தது தென் ஆப்ரிக்கா அணி.