தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டு தொடரிலும் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹானெஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்க வீரர்களாக ஜேன்மன் மலன் மற்றும் ரெஸா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 58 ரன்களை சேர்த்தது. முதல் விக்கெடாக ஜேன்மன் மலன் 33 ரன்னில் ஷாத் கான் ரன் அவுட் செய்தார். பின்னர் வந்த டுஸ்ஸென் நிலைத்து விளையாடினார். ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் டெவிட் மில்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய டுஸ்ஸென் 45 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹென்ரிக் க்ளாசென் கடைசி நேரத்தில் களம் இறங்கினார். மில்லரின் அதிரடியில் தென் ஆப்ரிக்கா அணி நல்ல ஸ்கோர்ஸ் அடைந்தது. அதிரடியாக விளையாடி மில்லர் டி-20 அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்தார். அதிரடி அசத்திய மில்லர் 65 ரன்னில் 4 ஃபோர்ஸ் மற்றும் 5 சிக்ஸ் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் மற்றும் அப்ரிடி இருவரும் ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 188 ரன்களை எடுத்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீர்ரகளாக பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆசாம் இருவரும் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால் பக்கர் ஜமான் 14 ரன்னிலேயே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த தாலட், பாபர் ஆசாம் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த இணையை பிரிக்க முடியாமல் தடுமாறியது தென் ஆப்ரிக்கா அணி. பாகிஸ்தான் அணி 147 ரன்களை எடுத்த போது பாபர் ஆசாம் 90 ரன்களில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார்.
பின்னர் வந்த ஆஷிஃப் அலி 2 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். 16 வது ஓவர் வரை வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி சரிய தொடங்கியது. தலட் 55 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் கேப்டன் மாலிக் 6 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த இமாத் வாசிம் 6 ரன்னில் மோரிஸ் ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹாசன் அலி 1 ரன்னில் பெலுக்வாயோ ஓவரில் அவுட் ஆகினார். கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவைபட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்கள் இழந்து தோல்வியுற்றது.