தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்றது அதில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி. அதன் பின்னர் ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது . இதில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. நேற்று மூன்றாவது ஒரு நாள் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டீ- காக் மற்றும் ஸ்டைன் ஆகியோர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணியில் இணைந்தனர் . பாகிஸ்தான் அணியில் இமாத் வாஜிம் மற்றும் முகமது அமீர் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர் . டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் மற்றும் இமாம் – உல்- ஹாக் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர் .
பக்கர் ஜமான் வந்த வேகத்தில் 2 ரன்னில் கென்ரிக்ஸ் ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பாபர் ஆசாமும் இமாம் -உல்-ஹாக் இருவரும் இணைந்த இந்த ஜோடி நிலைத்து நின்று வலுவான ஸ்கோரை எகிர செய்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெடிற்கு 132 ரன்களை சேர்த்தது. பாபர் ஆசாம் ஒரு நாள் போட்டில் தனது 10 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பாபர் ஆசாம் 69 ரன்களில் ஸ்டைன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் வந்த ஹபிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஹபிஸ் தனது 36 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஹபிஸ் 52 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய அணியின் நட்சத்திர வீரர் மாலிக் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் இமாம் -உல்- ஹாக் தனது 5 வது சதத்தை விளாசினார். இமாம் -உல்- ஹாக் 101 ரன்னில் ஷாம்ஸி ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மாலிக் 31 ரன்னிலும், அலி 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 317-6 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷப்ராஸ் 6 ரன்னிலும், இமாத் வாஜிம் 43 ரன்னிலும் களத்தில் இருந்தனர் . தென் ஆப்ரிக்காவில் ஸ்டைன் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்களையும் , கென்டிரிக்ஸ் மற்றும் ஷாம்ஸி தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 318 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது . தொடக்க ஆட்டகாரர்களாக டீ-காக் மற்றும் அம்லா ஆகியோர் களம் இறங்கினர் . டீ- காக் 33 ரன்னில் ரன்அவுட் ஆகினார். பின்னர் வந்த கென்ரிக்ஸ் நிலைத்து விளையாடினார் . அம்லா 25 ரன்னில் ஹஷான் அலி ஓவரில் விக்கெட் இழந்தார் . தீடிரென மழை குறிகிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மிண்டும் சிறிது நேரம் கழித்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் கென்டிரிக்ஸ் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வந்த கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 40 ரன்களை குவித்தார். கென்ரிக்ஸ் 83 ரன்னிலும் , கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 40 ரன்னிலும் களத்தில் இருந்த போது மழை குறிகிட்டது. தென் ஆப்ரிக்கா அணி 187-2 ரன்களை சேர்த்திருந்தது. மழை தொடர்ந்ததால் ஆட்டத்தின் முடிவு DLS முறைப்படி தென் ஆப்ரிக்கா அணி 13 ரன்கள் வீத்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முலம் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முன்னிலை பெற்றது.