தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டு தொடரிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த நிலையில் நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் உஷ்மன் சின்வாரி பதில் முகமது அமீர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதனை அடுத்து முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பக்கர் ஜாமன் மற்றும் பாபர் ஆஷாம் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் எடுத்த போது பாபர் ஆஷாம் 23 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் மலனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய ரிஷ்வான் நிலைத்து விளையாட பக்கர் ஜாமன் 17 ரன்னில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் மாலீக் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி ரிஷ்வான் 26 ரன்னில் சிபாம்ல பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் கண்ட தலட் சிறப்பான ஆட்டத்தை கடந்த இரண்டு போட்டிகளிலும் வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியில் 3 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய ஆஷிப் அலி நிலைத்து விளையாட மாலீக் 18 ரன்னில் ரன் அவுட் ஆகினார்.

பின்னர் வந்த இமாத் வாசிம் மற்றும் ஆஷிப் அலி சிறிது நேரம் நிலைத்து விளையாட வாசிம் 19 ரன்னில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் ஆஷிப் அலி 25 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பாஷிம் அஷ்ரப் 4 ரன்னில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆக அதனை தொடர்ந்து வந்த அமீர் டக் அவுட் ஆகி வெளியேறினார். சதாப் கான் கடைசி வரை 22 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க வீரர்களாக வந்த ரெஸா ஹென்ரிக்ஸ் 5 ரன்னில் அப்ரிடி பந்திலும், மலன் 2 ரன்னில் இமாத் வாசிம் பந்திலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த டெர் டுஸ்ஸென் நிலைத்து விளையாட கிளாஸ்சன் 2 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி 30-3 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது இந்த நிலையில் களம் இறங்கிய கேப்டன் மில்லர் 13 ரன்னில் சதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து பெலுக்வாயோ 10 ரன்னில் சதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி டுஸ்ஸென் 41 ரன்னில் பாஷிம் அஷ்ரப் பந்தில் விக்கெட் இழந்தார். பின்னர் வந்த மோரிஸ் அதிரடி காட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்து 27 ரன்கள் வித்தியசத்தில் தோல்வி அடைந்தது. மூன்றாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி