தற்போது தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை எற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்னஸ்ப்ர்க் மைதானத்தில் தொடங்கியது. தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுப்-ப்ளாஸிஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் கேப்டனாக டீன் எல்கர் விளையாடுகிறார். பாகிஸ்தான் அணியில் ஷாத் கான் , ஃபாஹிம் அஷ்ரஃப், முகமது அப்பாஸ் முன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி நிலைத்து விளையாடியது அணியில் அதிக பட்சமாக 90 ரன்களை ஏடுத்தார். அம்லா 41 ரன்னிலும் , தொவுனிஸ்- டீ -ப்ரைன் 49 ரன்னிலும், ஹாம்ஷா 41 ரன்னிலும் நிலைத்து விளையாடினார். தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் எல்கர் , பவுமா, டீ- காக், ஃபிலாண்டர் , ரபாடா , ஸ்டைன் மற்றும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெடையை இழந்து வெளியேறினர். தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 262-10 ஏடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஃபாஹிம் அஷ்ரஃப் 3 விக்கெட்களையும் , அமிர் , முகமது அப்பாஸ் , ஹசான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஷாத் கான் ஒரு விக்கெடையும் விழ்த்தினர். பின்னர் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17-2 எடுத்தது .
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்களை இழந்திருந்த நிலையில் முகமது அப்பாஸ் 11 ரன்னில் ஓலிவேர் பந்தில் விக்கெட் இழந்தார். அதே ஓவரில் பின்னர் இறங்கிய ஷபிக் டக்-அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாம் நிலைத்து ஆடினார். மறுபுறம் நிலைத்து விளையாடிய இமாம்-உல்-ஹாக் 43 ரன்னில் தனது விக்கெடை இழந்தார். பின்னர் பாபர் ஆசாம் உடன் ஜோடி சேர்ந்த ஷாஃரஸ் அகமது 50 ரன்னிலும் பாபர் ஆசாம் 49 ரன்னிலும் விக்கெடை இழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஓலிவேரிடம் விக்கெடையை இழந்து வெளியேறினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்களை ஏடுத்தது. தென் ஆப்ரிக்காவின் இளம் வீரர் ஓலிவேர் இந்த தொடரில் தனது மூன்றாவது 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஃபிலாண்டர் 3 விக்கெடையும் , ராபாடா 2 விக்கெடும் வீத்தினர்.
தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது ஏற்கனவே 77 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் எல்கர் மீண்டும் 5 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து மார்க்ரம் 21 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களம் இறங்கிய அம்லா நிலைத்து விளையாடினர். தொவுனிஸ்-டி-ப்ரைன் வந்த வேகத்தில் 7 ரன்னில் ஃபாஹிம் அஷ்ரஃப் பந்தில் விக்கெடை பறிக்கொடுத்தார். பவுமா 23 ரன்களிலும் ஷாத் கான் பந்தில் அவுட் ஆகினார்.பின்னர் வந்த டீ-காக் 34 ரன்களை எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 135-5 ஏடுத்துள்ளது. 212 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்ரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.