தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் கடந்த 11 ம் தேதி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை எடுத்தது. அதில் அதிக பட்சமாக மார்க்ரம் 90 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்காவின் வேகபந்து விச்சாளர் ஒலிவேர் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்கா அணி இதை அடுத்து இரண்டாம் நாள் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அம்லா 71 ரன்களும், டி-காக் 129 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 380 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் அணி 380 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் – உல் – ஹாக் 35 ரன்னிலும் மாசூட் 37 ரன்னிலும் தனது விக்கெடை இழந்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஷார் அலி 15 ரன்னில் அவுட் ஆகினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஷாபிக் 42 ரன்களும் மற்றும் பாபர் ஆசாம் 17 ரன்னுடனும் களதில் இருந்தனர் . இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி ஷாபிக் 65 ரன்கள் எடுத்து ஃபிலாண்டர் பந்தில் விக்கெட் பறிகொடுத்தார். பாபர் ஆசாம் 21 ரன்னில் ஓலிவேர் பந்தில் தனது விக்கெடை இழந்தார். கேப்டன் ஷப்ஃராஸ் டக் அவட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களம் இறங்கிய ஷாத் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷாத் கான் 47 ரன்னில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் களம் கண்ட பாஃஷிம் அஷ்ரஃப் 15 ரன்னில் ரபாடா பந்தில் விக்கெட் இழந்தார். அமீர் 4 ரன்னில் அதே ரபாடா பந்தில் பந்தில் ஆட்டம் இழந்தார். ஹசான் அலி 22 ரன்களில் ரபாடா பந்தில் விக்கெட் இழந்தார். அப்பாஸ் 9 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதில் அனைத்து விக்கெடையும் இழந்த பாகிஸ்தான் அணி 273 ரன்களை எடுத்தது. தென் ஆப்ரிக்காவின் ரபாடா மற்றும் ஓலிவேர் தலா 3 விக்கெட்களை விழ்த்தினர். ஸ்டைன் 2 விக்கெட்களும் , ஃபிலாண்டர் ஒரு விக்கெடும் விழ்த்தினர். தென் ஆப்ரிக்கா அணி பாகிஸ்தானை விட 107 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை விழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை டீ-காக் பெற்றுச் சென்றார். தொடர் நாயகன் விருதினை தென் ஆப்ரிக்காவின் இளம் வேகப்பந்து விச்சாளர் ஒலிவேர் பெற்றார். ஒலிவேர் இந்த தொடரில் 24 விக்கெட்களை விழ்த்தியது குறிப்பிடதக்கது.