தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது . முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா அணி 262 ரன்களை ஏடுத்தது. அதிக பட்சமாக மார்க்ரம் 90 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியின் 185 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தென் ஆப்ரிக்கா அணியை விட 77 ரன்கள் பின்னிலை அடைந்தது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷார்ஃபராஸ் அரை சதம் விளாசினார். தென் ஆப்ரிக்காவின் வேகபந்து வீச்சாளர்கள் ஓலிவேர்-5, ஃபிலாண்டர்-3, ராபாடா-2 விக்கெட்களை வீழ்த்தினர். இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 135 -5 ஏடுத்தது. அம்லா மற்றும் டீ-காக் களத்தில் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி களத்தில் அம்லா 42 ரன்னிலும், டீ-காக் 34 ரன்னுடனும் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடி 102 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்லா 71 ரன்னில் ஹசான் அலி பந்தில் விக்கெடை பறிகொடுத்தார். அடுத்தாக களம் இறங்கிய ஃபிலாண்டர் 14 ரன்னில் அமீர் ஓவரில் lbw முறையில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய ரபாடா சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய குயின்டன்- டீ -காக் தனது டெஸ்ட் அரங்கில் நான்காவது சதத்தை பதிவு செய்தார். 129 ரன்கள் ( 18 ப்வுண்டரிகள், 1 சிக்ஸ் ) எடுத்து இருந்த பொழுது ஷாத் கான் பந்து வீச்சில் தனது விக்கெடை பறிகொடுத்தார். அதன் பின்னர் களம் இறங்கய ஓலிவேர் 1 ரன்னிலும் ரபாடா 21 ரன்னிலும் அடுத்தடுத்த விக்கெட் இழந்தனர். ஸ்டைன் ரன் எதுவும் எடுக்காத நிலையில் கடைசி வரை களத்தில் இருந்தார். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303-10 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு 380 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை ஃபாஷிம் அஷ்ரஃப் மற்றும் ஷாத் கான் தலா 3 விக்கெட்களும் , அமீர் 2 விக்கெட்டும் , அப்பாஸ் மற்றும் ஹசான் அலி 1 விக்கெட்களையும் வீத்தினர்.
பாகிஸ்தான் அணி 380 ரன்களை இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது தொடக்க ஆட்ட காரர் ஆன இமாம் – உல்-ஹாக் மற்றும் மாசூட் இரண்டு பேரும் ஜோடி சேர்ந்து தொடக்கதிலே பொறுமையாக விளையாடினர். முதல் விக்கெட்டிற்கு 67 ரன்களை சேர்த்த இந்த ஜோடி இமாம் – உல் – ஹாக் 35 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டைன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். மாசூட் 37 ரன்களில் ஸ்டைன் ஓவரில் தனது விக்கெடை இழந்தார்.
பின்னர் களம் இறங்கிய அஷார் அலி 15 ரன்களில் ஓலிவேர் பந்தில் தனது விக்கெட் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாபிக் மற்றும் பாபர் அசாம் நிலைத்து விளையாடினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 153-3 எடுத்துள்ளது. இன்னும் தென் ஆப்ரிக்கா அணியை விட 228 ரன்கள் பின்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் ஷாபிக் 48 ரன்களுடன் பாபர் அசாம் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.