பாகிஸ்தான் அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது . டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்த நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை தற்போழுது விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் வென்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் பெறும் எதிர்பார்ப்பில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏதிர்பார்க்கபட்டது. இந்த போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக இமாம் -உல்-ஹாக் மற்றும் பக்கர் ஜாமன் இருவரும் களம் இறங்கினர் .
இமாம் -உல்- ஹாக் 8 ரன்னில் ஸ்டைன் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆசாம் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். பக்கர் ஜாமன் 20 ரன்னில் இருந்தபோது அம்லா தவறவிட்ட கேட்ச்சின் விளைவு 70 ரன்களை குவித்தார் . 70 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை அடுத்து களம் கண்ட ஹபிஸ் 17 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். பாபர் ஆசாம் 24 ரன்னில் பிரிட்டேரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக் மற்றும் ரிஸ்வான் இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்தனர். ரிஸ்வான் 10 ரன்னில் பிரிட்டேரியஸ் ஓவரில் விக்கெட் இழந்தார் . பாகிஸ்தான் அணி தடுமாற்றதுடன் இருந்த நிலையில் மாலிக் 31 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாத் கான் மற்றும் வாஸிம் சிறப்பாக விளையாடினர் 19 ரன்னில் ஷாத் கான் வெளியேறினார் .
வாஸிம் 47 ரன்னில் விக்கெட் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார் . 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது . பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக அம்லா மற்றும். டி- காக் களம் இறங்கினர். டி – காக் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். அம்லா 14 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய கேன்ரிக்ஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். அவர் 34 ரன்னில் அமீர் ஓவரில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ப்ளாஸிஸ் நிலைத்து விளையாடினார் . அதிரடியாக விளையாடிய டி- காக் 83 ரன்னில் உஷ்மான் கான் ஓவரில் அவுட் ஆகினார் .
இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ப்ளாஸிஸ் மற்றும் தஸ்சன் இருவரும் பொருமையாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது . இருவரும் அரைசதத்தை கடந்து ஆட்டம் இலக்காமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி . 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா அணி. ஆட்ட நாயகன் விருது டி- காக் மற்றும் தொடர் நாயகன் விருது இமாம் -உல் – ஹாக் வழங்கப்பட்டது .