தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் பௌட்டிகளில் விளையாடியது. இரண்டு தொடரிலும் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முதல் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டது தென் ஆப்ரிக்கா அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்க வீரர்களாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் கிஹான் குளோட் இருவரும் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தை தந்த இந்த இணை, குளோட் 13 ரன்னில் இருந்த போது இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார்.
பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பாப் டுப் பிளெஸ்ஸிஸ், ஹென்றிக்ஸ் உடன் இணைந்து அதிரடி காட்டினார். இந்த இணை பாகிஸ்தான் பவுலர்களின் பந்துகளை பதம் பார்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் தடுமாறியது பாகிஸ்தான் அணி. 26-1 என்ற நிலையில் இருந்து 156-1 என்ற நிலைக்கு கொண்டு சென்றது இந்த ஜோடி. கேப்டன் பாப் டுப் பிளெஸ்ஸிஸ் 78 ரன்களை குவித்து மகிழ்ச்சி அளித்தார். அவர் 78 ரன்னில் உஸ்மன் சின்வாரி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய வண்டெர் தொஸ்ஸன் வந்த வேகத்தில் 2 பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொஸ்ஸன் பெறிதும் எதிர்பார்க்கபட்டார்.
பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் சிறிது நேரம் தாக்குபிடித்தார். நிலைத்து விளையாடிய ஹென்ரிக்ஸ் 74 ரன்னில் உஸ்மன் சின்வாரி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கிரிஸ் மோரிஸ் 1 ரன்னில் ஹசன் அலி ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹென்றிச் கிளாஸ்சன் 5 ரன்னில் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்கா அணி 192 ரன்களை சேர்த்தது. இதனை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆசாம் களம் இறங்கினர். பக்கர் ஜமான் 4 ரன்னில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹுசைன் தலட் நிலைத்து விளையாடினார். தலட் 40 ரன்னில் பர்வைஸ் சம்ஸி பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி பாபர் ஆசாம் 38 ரன்னில் மில்லரிடம் ரன்அவுட் ஆகினார்.
பின்னர் களம் இறங்கிய ஷோயிப் மாலிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஷிப் அலி 13 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய இமாத் வாசிம் 4 ரன்னில் சம்ஸி பந்தில் அவுட் ஆகினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். பாஹிம் ஆஷ்ராப் 2 ரன்னில் 8 ரன்னில் பிலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹசன் அலி 11 ரன்னில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி மாலிக் 49 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். ஆட்டத்தின் முடிவில் 6 ரன்கள் வீத்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மில்லர் தேர்வு செய்யபட்டார் இவர் இரண்டு ரன் அவுட் மற்றும் நான்கு கேட்ச் புடித்தார்.