தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளயாடியது. இரண்டு தொடர்களும் முடிவடைந்த நிலையில் கடைசியாக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்ற நிலையில் ஒரு நாள் போட்டி தொடரில் 5-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி . இந்த நிலையில் முதல் டி-20 போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் டுக்குவெல்லா மற்றும் அவிஷ்க் பெர்னாண்டோ இருவரும் களம் இறங்கினர். ஸ்டைன் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே டுக்குவெல்லா டக் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ராபாடா பந்தில் புதியதாக களம் இறங்கிய குசால் மென்டிஸ் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மென்டிஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய மென்டிஸ் சிறப்பாக விளையாடினார்.
அவருடன் விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ 16 ரன்னில் சிபாம்லா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஆன்ஜெலொ பெரேரா 16 ரன்னில் பெலுகுவாயோ பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய மென்டிஸ் 41 ரன்னில் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த டி சில்வா மற்றும் திசேரா பெரேரா இருவரும் சிறிது நிலைத்து நின்றனர்.
பெலுகுவாயோ வீசிய 19வது ஓவரில் டி சில்வா 14 ரன்னிலும் திசேரா பெரேரா 19 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதை அடுத்து இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 134-7 ரன்களை எடுத்தது.
தென் ஆப்ரிக்கா அணி வீரர்களின் வீக்கேட் விவரம்: பெலுகுவாயோ-3, ராபாடா-1, தாஷிர்-1, சிபாம்லா-1, ஸ்டைன்-1.
அதன் பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் 8 ரன்னில் ரன் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பாப் டுப் பிளாஸிஸ் நிலைத்து விளையாட, டி காக் 13 ரன்னில் தனஜெயா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த டெர் டுஸ்ஸென் நிலைத்து விளையாட டுப் ப்ளாஸிஸ் 21 ரன்னில் இலங்கை வீரர் ஜெப்ரி வண்டெர்சி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் டேர் டுஸ்ஸென் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அணி எளிதில் வெற்றி இலக்கை நோக்கி சென்றது. டுஸ்ஸென் 34 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து டுமினி களம் இறங்கினார். மில்லர் 40 ரன்னில் ரன் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பெலுகுவாயோ 4 ரன்னில் அவுட் ஆகினார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைபட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதை அடுத்து சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 14 ரன்களை எடுத்தது. அதை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இம்ரான் தாகிர் சிறப்பான முறையில் பந்து வீசி தென் ஆப்ரிக்கா அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மில்லர் பெற்றார்.