தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடிய நிலையில் கடைசியாக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்ற நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி-20 போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவில் உள்ள சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயாத்தில் இருந்தது இலங்கை அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் மற்றும் ரெஸா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே மார்க்ரம் 3 ரன்னில் உடானா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய டெர் டுஸ்ஸென் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். டெர் டுஸ்ஸென் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 116 ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ட்ரிக்ஸ் 65 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து டெர் டுஸ்ஸென் 64 ரன்னில் தனஜெயா பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய டுமினி இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். டுமினி அதிரடியாக 33 ரன்களை அடிக்க தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை எடுத்தது.

இலங்கை அணி வீரர்களின் விக்கெட் விவரம்: உடானா-1, மலிங்கா -1, தனஜெயா-1.
அதை தொடர்ந்து பின்னர் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் டிக்குவெல்லா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ இருவரும் களம் இறங்கினர். வந்த வேகத்தில் அவிஷ்க பெர்னாண்டோ ஸ்டைன் பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய குசால் மென்டிஸ் 4 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகினார். இலங்கை அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை இழந்தது. அதை அடுத்து களம் இறங்கிய திசேரா பெரேரா சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். அதிரடி காட்டிய டிக்குவெல்லா 20 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கமிண்டு மென்டிஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நிலைத்து விளையாடிய திசேரா பெரேரா 22 ரன்னில் ப்ரிடொரியஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை அடுத்து ஆன்ஜெலொ பெரேரா 11 ரன்னில் ஷம்சி பந்தில் அவுட் ஆகினார்.

ஒரு பக்கம் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழ்ந்து வந்தாலும், இதை அடுத்து வந்த உடானா முதலில் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். உடானாவின் அதிரடியில் உரைந்து போனது தென் ஆப்ரிக்கா அணி. தனஜெயா 1 ரன்னில் ஷம்சி பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து மலிங்கா 8 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 164-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது தென் ஆப்ரிக்கா அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக டெர் டுஸ்ஸென் தேர்வு செய்யப்பட்டார்.