இலங்கை அணி தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா!!!

Pravin
டி காக்
டி காக்

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் திரில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இதனை அடுத்து தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிஸபெத் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 222 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக இலங்கை அணி வீரர்கள் பந்துவீசினர். இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 60-3 ரன்களை எடுத்தது.

இதை அடுத்து இரண்டாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் நிலைத்து விளையாடி திரிமனே 29 ரன்னில் ஓலிவேர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய குசால் பெரேரா பொறுமையாக விளையாடினார். ராஜிதா 1 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆக அதனை தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா களம் இறங்கினார். குசால் பெரேரா 20 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து தனஜெயா டி சில்வா 19 ரன்னில் முல்டேர் பந்தில் அவுடாகி பெவுலியன் திரும்பினார். இதை தொடர்ந்து லக்மல் 7 ரன்னில் மகாராஜா பந்தில் அவுட் ஆக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 154 ரன்களை அடித்தது. முதல் இன்னிங்ஸில் 68 ரன்களை பின்தங்கி இருந்தது இலங்கை அணி. தென் ஆப்ரிக்கா அணியில் ராபாடா 4 விக்கெட்களும், ஓலிவேர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்கத்திலிருந்தே விக்கெட்களை இழந்தனர். எல்கர் 2 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து மார்க்ரம் 18 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து பவுமா 6 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். தொடர்ந்து விக்கெட்களை இழந்த தென் ஆப்ரிக்கா அணியில் சிறிது நேரம் கேப்டன் டுப் பிளாஸிஸ் நிலைத்து விளையாடினார். அம்லா 38 ரன்னில் தனஜெயா டி சில்வா பந்தில் அவுட் ஆகினார். வந்த வேகத்தில் டி காக் 1 ரன்னில் லக்மல் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து முல்டேர் 5 ரன்னில் தனஞ்ஜெயா டி சில்வா பந்தில் அவுட் ஆக மகாராஜா 6 ரன்னில் லக்மல் பந்தில் அவுட் ஆகினார். ராபாடா, ஸ்டைன் மற்றும் ஓலிவேர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர்.

இலங்கை அணி வீரர்கள்
இலங்கை அணி வீரர்கள்

நிலைத்து விளையாடி டுப் பிளாஸிஸ் அரை சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்களை எடுத்தது. இலங்கை அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி.

டுப் பிளாஸிஸ் அரை சதம்
டுப் பிளாஸிஸ் அரை சதம்

இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய திரிமனே 10 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆக கருனாரத்னே 18 ரன்னில் ஓலிவேர் பந்தில் அவுட் ஆகினார். இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 60-2 ரன்களை அடித்துள்ளது. இலங்கை அணிக்கு இன்னும் 137 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. இலங்கை அணி இன்று தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி தொடரை வென்று சாதனை படைக்குமா!!!.

Edited by Fambeat Tamil