இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கியது தென் ஆப்ரிக்கா அணி 

Pravin
விஷ்வா பெர்னாண்டோ
விஷ்வா பெர்னாண்டோ

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் திரில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிஸபெதில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா அணி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் ஐடென் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே டீன் எல்கர் 6 ரன்களில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய அம்லா அதே விஷ்வா பெர்னாண்டோ பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய பவுமா ரன் எதுவும் எடுக்காமல் ராஜிதாவிடம் ரன் அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி 15-3 என்ற நிலையில் தடுமாறியது. அதன் பின்னர் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டுப் ப்ளாஸிஸ் நிலைத்து விளையாடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் டுப் பிளாஸிஸ் 25 ரன்னில் கருனாரத்னே பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய குவிண்டன் டி காக் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடி மார்க்ரம் அரைசதம் அடித்து 60 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய முல்டர் வந்த வேகத்தில் 9 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மகாராஜா ராஜிதா பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை அடுத்து நிலைத்து விளையாடி டி காக் 86 ரன்னில் டி சில்வா பந்தில் அவுட் ஆகினார்.

டி காக் 86 ரன்கள்
டி காக் 86 ரன்கள்

அதனை தொடர்ந்து களம் இறங்கிய ராபாடா சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ரபாடா 22 ரன்னில் டி சில்வா பந்தில் அவுட்டாக வந்த வேகத்தில் ஓலிவேர் டக் அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் ராஜிதா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், டி சில்வா 2 விக்கெட்களையும் கைபற்றினர்.

இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருனாரத்னே மற்றும் திரிமனெ இருவரும் களம் இறங்கினர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய கருனாரத்னே 17 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஒஷாடா பெர்னாண்டோ ஒலிவேர் பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய குசால் மென்டிஸ் 16 ரன்னில் ஒலிவேர் பந்தில் அவுட்டாக இலங்கை அணி 60-3 ரன்களை எடுத்தது. திரிமன்னெ 25 ரன்களுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தார். இலங்கை அணி தென் ஆப்ரிக்கா அணியை விட 162 ரன்கள் பின்தங்கி உள்ளது.