5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி 

Pravin
South Africa team
South Africa team

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உபுல் தரங்கா இருவரும் களம் இறங்கினர்.

Imran tahir
Imran tahir

தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியிலும் 9 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். மற்றொரு தொடக்க வீரர் உபுல் தரங்கா இந்த தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அதே போல் இந்த போட்டியிலும் 2 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து பின்னர் ஜோடி சேர்ந்த ஓஷாடா பெர்னாண்டோ மற்றும் குசால் மென்டிஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். ஓஷாடா பெர்னாண்டோ 22 ரன்னில் இம்ரான் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் மென்டிஸ் உடன் ஜோடி சேர்ந்த பிரியாமல் பெரேரா நிலைத்து விளையாட மறுமுனையில் விளையாடிய குசால் மென்டிஸ் தனது 14வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பிரியாமல் பெரேரா 31 ரன்னில் தாஷிர் பந்தில் அவுட் ஆக மென்டிஸ் 56 ரன்னில் ரன் அவுட் ஆகினார். பின்னர் வந்த திசேரா பெரேரா வந்த வேகத்தில் 2 ரன்னில் அன்ரிச் நொர்டே பந்தில் அவுட் ஆகினார். அதற்கு பின்னர் வந்த வீரர்களில் உடனா மட்டும் நிலைத்து விளையாட இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ரன்களை எடுத்தது.

தென் ஆப்ரிக்கா வீரர்கள் வீழ்த்திய விக்கெட் விவரம்: ராபாடா 3, தாஷிர் 2, அன்ரிச் நொர்டே 2, லுங்கி இங்கிடி 1, பெலுகுவாயோ 1

Markam fifty
Markam fifty

அதன் பின்னர் தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர் டி-காக் மற்றும் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். டி-காக் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் இந்த போட்டியில் 6 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் பாப் டூப் ப்ளஸிஸ் நிலைத்து விளையாடினார். இருப்பினும் 24 ரன்னில் டூப் ப்ளாஸிஸ் திசேரா பெரேரா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த டெர் டுஸ்ஸென் நிலைத்து விளையாட மறுமுனையில் மார்க்ரம் அரைசதம் வீளாசினார். ஆட்டம் சிறிது நேரம் வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தபட்ட நிலையில் பின்னர் தென் ஆப்ரிக்கா அணி டிஎல்எஸ் முறையில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மார்க்ரமும் தொடர் நாயகன் விருதை குயிடன் டி-காக் பெற்றார்.

Edited by Fambeat Tamil