தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடிய உள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 80 ரன்களை அடித்தார். அதன் பின்னர் விளையாடி இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களை அடித்தது. தென் ஆப்ரிக்கா அணியை விட 44 ரன்கள் பின்தங்கி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 259 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இலங்கை அணிக்கு 304 ரன்களை இழக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி. இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்திருந்தது.
இந்ந நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை விளையாட வந்த இலங்கை அணியில் குசால் பெரேரா 12 ரன்னிலும் ஒஷாடா பெர்னாண்டோ 25 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். எனினும் பெர்னாண்டோ 37 ரன்னில் ஸ்டைன் பந்து விச்சில் அவுட் ஆகினார். அடுத்து வந்த டிக்குவெள்ள அதே ஒவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த ஒவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. தென் ஆப்ரிக்கா அணிக்கு விக்கெட்கள் சாதகமாக அமைந்த போதிலும் அதன் பின்னர் இணைந்த குசால் பெரேரா மற்றும் தனஜெயா டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. நிலைத்து விளையாடிய குசால் பெரேரா அரைசதம் வீளாசினார். இந்த ஜோடி நிலைத்து நின்று வெற்றி இலக்கை நெறுங்கியது.
இந்த ஜோடி 96 ரன்களை சேர்த்த போது தனஜெயா டி சில்வா 48 ரன்னில் மகாராஜா பந்தில் அவுட் ஆகினார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் லக்மல் டக் அவுட் ஆகினார். இலங்கை அணி தடுமாற தொடங்கியது. ஆனால் மறுமுனையில் குசால் பெரேரா அவுட் ஆகாமல் நிலைத்து நின்று விளையாடினார். பின்னர் களம் இறங்கிய லசித் அம்புலடேனிய 4 ரன்னில் ஒலிவேர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ராஜிதா 1 ரன்னில் மகாராஜா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்களை பறிகொடுத்தது. நிலைத்து விளையாடிய குசால் பெரேரா தனது இரண்டாவது டெஸட் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பெர்னாண்டோ 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குஷல் பெரேரா ஒரு வீரர் மட்டும் நிலைத்து விளையாடி இலங்கை அணியை திரில் வெற்றி பெற செய்தார். இந்த போட்டி இலங்கை அணிக்கு ஒரு வறலாற்று வெற்றியை பெற்று தந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி குசால் பெரேரா (153)*ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.