தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென் ஆப்ரிக்கா அணியையே வீழ்த்தியுள்ள இலங்கை அணி வெற்றி உற்சாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த சுற்றுபயணத்தில் இன்னும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளது. இந்த நிலையில் இலங்கை அணி ஏற்கனவே தங்களின் ஒரு நாள் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இலங்கை அணியில் முத்த வீரர்களான ஆஞ்சலோ மேத்தியூஸ் மற்றும் சண்டிமல், சமிரா, போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி மலிங்கா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது. அதில் 4 பெரேரா மற்றும் 3 பெர்னாண்டோ என அணியில் பல மாற்றங்களுடன் களம் இறங்குகிறது இலங்கை அணி. அதே சமயம் மலிங்கா, திசேரா பெரேரா, தரங்கா, தனஜெயா போன்ற முக்கிய வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணி தங்களின் முதல் மூன்று போட்டிகளுக்கான தங்களின் அணியை அறிவித்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை தழுவியுள்ள தென் ஆப்ரிக்கா அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் முக்கிய வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது தென் ஆப்ரிக்கா அணி. தென் ஆப்ரிக்கா அணி வீரர் லுங்கி இங்கிடி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு ஏதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு ஏதிரான தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறாத நிலையில் இலங்கை அணிக்கு ஏதிரான ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளார். உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் தொடர் என்பதால் லுங்கி இங்கிடி அணியில் இடம் பெற்றுள்ளார்.
அதே போல் தென் ஆப்ரிக்கா அணியில் புதியதாக 25 வயதான இளம் வீரர் அஞ்ரிச் நார்சி அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் மான்சி சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். இவர் 6.91 எக்னாமி வைத்துள்ளார். அதே சமயம் உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் அணியில் அம்லா மற்றும் டுமினி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெறாத நிலையில் உள்ளது. இவர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 14 பேர் கொண்ட தென் ஆப்ரிக்கா அணி: (கேப்டன்) பாப் டுப் ப்ளாஸிஸ், குயிடன் டி காக், இம்ரான் தாகிர், லுங்கி இங்கிடி, டேவிட் மில்லர், ஸ்டைன், ராபாடா, ஷம்சி, ஹென்ரிக்ஸ், முல்டர், அன்டில் பெலுக்வாயோ, வான்டர் துஸ்ஸென், அஞ்ரிச் நார்சி, பிரிடோரியஸ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஐந்து ஆல்-ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.